இலங்கை
இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
அதன்படி இந்த நன்கொடையில் 80 தொன் எடையுள்ள சுகாதாரப் பொருட் தொகுதிகள் அடங்குகின்றன.
இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
![]()