பலதும் பத்தும்

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது; உலங்குவானூர்தி மூலம் மீட்பு நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளநீர் அதிவேகமாக அதிகரித்த நிலையில், பயணிகள் உயிர் ஆபத்துக் குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button