இலங்கை

யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்

மாவீரர் நாள் நினைவேந்தல் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அதன்படி, (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்ல கீதம் ஒலிக்கப்பட்டது.

இதன்போது மண்ணின் விடுதலைக்காக வித்தாகியோரது பெற்றோரும், உரித்துடையோரும் கண்ணீர் விட்டு அழுததை அவதானிக்க முடிந்தது.

நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுகளையும் மக்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *