இலங்கை

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

நுகேகொடை மைதானத்துக்கு 1000 பேர் வரையில் அழைத்து வந்து விட்டு அதனை மாபெரும் மக்கள் பேரணி என்று குறிப்பிடுகிறார்கள். திருடர்கள் அனைவரும் தற்போது கூட்டு சேர்ந்துள்ளார்கள். மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறார்கள் என மக்களுக்காக நாளை அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மக்களுக்காக நாளை அமைப்பின் காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவதாக குறிப்பிட்டுக்கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் கூட்டத்தை நடத்தினார்கள். கூட்டத்துக்கு 1000 பேர் கூட வரவில்லை. ஆனால் மாபெரும் கூட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கலந்துக் கொள்ளவில்லை.

ஊழல்வாதிகள்,கொலையாளிகள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். அரசாங்கத்தின் அடக்குமுறை என்று குறிப்பிடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித அடக்குமுறைகளையும் பிரயோகிக்கவில்லை.

ஊழல்வாதிகளுக்கு எதிராக தற்போது சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறது. இதனை எவ்வாறு அரசியலமைப்பு சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது.

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இன்று நாமல் ராஜபக்‌ஷ பொருளாதார பாதிப்பு பற்றி பேசுகிறார். பொருளாதார மீட்சிக்கான ஆலோசனைகளை முன்வைக்கிறார்.நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் பேசுகிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கடந்த காலங்களில் முரண்பட்டுக் கொண்டார்கள்.2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தல் மேடையில் பேசிய ஹரின் பெர்னாண்டோ” உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கல்” ராஜபக்‌ஷர்களின் திட்டம் என்று குறிப்பிட்டார்.ஆனால் இன்று ” இளவரசர் நாமல்” என்று குறிப்பிடுவார்.இவர்களின் கொள்கை என்னவென்பது தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சியினர் நாளை தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் கடந்தக் காலங்களை போன்று முரண்பட்டுக் கொள்வார்கள்.இதுவே இவர்களின் அரசியல் கொள்கையாகும்.மக்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *