கட்டுரைகள்

தொப்புள் கொடி உறவுகள் என்போர் யார்?…  ஏலையா க.முருகதாசன்

தமிழகத் தமிழர்களும் தமிழர்கள் தான் என்பதற்காக அவர்களை முன்னிறுத்துவதோ அவர்களிடம் போய் கைகட்டி நிற்பதோ தவறிலம் தவறாகும்.

இலங்கைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைபாடுகளைத் தாமாகவே முடிவெடுக்கு வேண்டும்.இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் அரசியல்வாதிகள்.தாம் எடுத்த முடிவுகளை இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளாக,நாங்கள் இப்படித் தீர்மானித்திருக்கிறோம் எனத் தாங்கள் எடுத்த முடிவுகளை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடமோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதுவரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் என்னவிருக்கின்றது.

அப்படியென்றால் தாமாக முடிவெடுக்கும் திறமையோ ஆளுமையோ அது சார்ந்த சுயகௌரவமோ தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லையா.இலங்கை தனித்துவமான நாடு.அது இலங்கையின் மாகாணம் அல்ல.

இந்தியத் தூதுவர்களாகவும் தமது நாட்டுக்கு உளவுபார்ப்பவர்களாகவும் இருக்கும் இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து கைகட்டி வாய்பொத்தி எஜமான் சொல்லுங்கோ என நிற்பது வெட்கக் கேடான செயல்.

இந்தியா பக்கது நாடாக இருக்கட்டும்,அரசியல் இராஜதந்திர உறவுகள் இருக்கட்டும்,வர்த்தக உறவுகள் இருக்கட்டும்,கண்ட ரீதியில் பிராந்திய ரீதியில் என அணி சேர்ந்திருத்தல் என்பதும் சரிஎல்ல,இந்திய மக்களும் இலங்கை மக்களும் வேறு வேறு நாட்டின மக்கள்.இந்தியா இந்திய உபகண்டம் இலங்கை ஒரு தீவு.ஆனால் ஒவ்வொரு தனிமனிதனுந்தான் நாட்டின் அலகு.அதனால் இலங்கையை எப்படி ஆண்டு நிர்வாகிக்க வேண்டும் என்பவர்கள் இலங்கையர்களே.

இலங்கையில் இனக்கலவரங்களை ஏற்படுத்தி அதன் கசப்புணர்வாக தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்து வைத்து அதன் தொடர்பாக ஒரு ஆயுதப் போராட்டத்தை தொடக்க வைத்து தமிழர்களில் இலட்சக்கணக்காணவர்கள் இறக்கவும் தமிழர்களின் காணிகளையும் அபகரிக்கவும் வழிவகுத்த நாடு இந்தியாவே.

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவது போல தமிழர்களை ஆயுத வழியில் போக றோவினால் தூண்டப்பட்டு அது போல தமிழர்களை அழிக்க அதே றோதான் இலங்கையரசுக்கு ஆலோசனையும் வழங்கி உதவியும் செய்தது.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மட்டக்களப்பில் இந்திய வணிகர்கள் என்ற போர்வையில் வந்து திறம்மிகு ஊடகவியலாளர் தராகி திரு.சிவராம் அவர்களைச் சந்தித்து இலங்கைக்கு எதிராக எழுத ஆலோசனை வழங்கியும் அவர் இலங்கை அசுக்கு எதிராக எழுதுவதற்குரிய இரகசியங்களை அவர்களே இலங்கையுடன் நட்புக் கொண்;டு இலங்கையின் இரகசியமான போர் நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் ஊடகவியலாளருக்கு சொல்லி அதை எழுத வைத்து தமது தேவை முடிந்ததும் அவர்களை இலங்கை மூலம் கொல்ல வைத்ததும் இந்தியாவேதான்.

ஒருவரைப் பயன்படுத்திவிட்டு அவரின் தேவை முடிந்ததும் அவரிடமிருந்து தாம் அவரைப் பயன்படுத்திய தகவல் எதுவும் வெளிவரக்கூடாது என்பதற்காக அவரைக் கொலை செய்வது உலக உளவு அமைப்புகள் செய்யும் ஒரு முறையாகும்.

இறுதியால் இனந் தெரியோரால் கொலை செய்யப்பட்டார் என பத்திரிகைகளில் செய்திகள் வரும் அல்லது எவரை நோக்கி எழுதினார்களோ அவர்களால் கொல்லப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துவது.

அன்று போரை நடத்திய இலங்கையரசுக்கு அந்த ஊடகவியலாளரைக் கொலை செய்ய ஆலோசனையைக் கூறியதே இந்திய அரசுதான் என நினைக்கத் தோன்றுகின்றது,அவ்வாறும் ஒரு சிலர் அன்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இலங்கையின் வணிகத்தைக் கையில் வைத்திருந்த இந்தியச் செட்டிமாரும் மலையாளிகளும் இலங்கையின் பொருளாதாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இலங்கையரசைக் கையில் போட்டுக் கொண்டு தாம் நினைப்பவற்றைத் தமது நலன் நோக்கியவற்றை செய்யும் வல்லமை உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை நிராகரிக்க முடியாது.

இலங்கையில் இனக்கலவரங்களை ஏற்படுத்தி அதன் வழியாக சிங்களவர்களுக்கிடையிலும் தமிழர்களுக்கிடையிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி அதன் பெறுபேறுகளையே இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களில் பலர் இந்தியா மீதும் தமிழகத்தின் மீதும் தேன் குடித்த தேனீ போல ஒரு மயக்கத்திலேயே இருக்கின்றனர்.

அதனால் பலர் தமிழகத் தமிழர்களை தொப்புள்கொடி உறவுகள் எனக் கொண்டாடுகின்றனர்,எழுதுகின்றனர்.

உன் வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்பதை உன் வீடுதானே தீர்மானிக்கவேண்டுமே தவிர மற்றவர்கள் சொல்ல வேண்டிய இழிநிலை தேவையா?.தமது அறிவும் ஆற்றலும் இலங்கைக் குடிமகன் என்ற இருப்பும் விக்கிரமாதித்தன் கதைகளில் வருவது ஏழு மலைதாண்டி ஏழுகடல் தாண்டி ஏதோ ஒரு வண்டிடம் இருப்பது போல இந்தியாவிடமா இருக்கின்றது,இலங்கைத் தமிழர்களின் அரசியலும் வாழ்வும்.

சிங்களவர்களை உதாசீனம் செய்துவிட்டு தமிழகத் தமிழர்களை தொப்புள் கொடி என்று மயங்கி எழுதுபவர்கள்,பேசுபவர்கள் 200 ஆண்டுகால வாழ்வின் துன்பம் மிகுந்த இருப்பு வரலாறு கொண்டு,இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகி தேயிலைச் செடிகளுகளுக்கு உரமாகியும்,இருக்க சராசரிக்கும் குறைவான வசதி கொண்ட வீடின்றி, லயன் என்ற புறாக்கூடு வீடுகளில் வாழ்ந்து கொண்டு வெளியுலகம் தெரியாது தேயிலைத் தோட்டமே வாழ்வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தமிழர்கள் இனி இலங்கைத் தமிழர்கள்தான் என ஆழவேரூன்றிய மனதுடன் நிமிர்மனமாகச் சொல்வதைத் தவிர்த்து தோட்டக்காட்டான், மலைநாட்டான், தோட்டத் தமிழர்கள் என்று பிரித்துச் சொல்லும் போது எங்கே போயிற்று உங்கள் தொப்புள்கொடி உறவுச் சிந்தனை.

எனது வீட்டுக்கு ஒரு வேலைக்காரப் பிள்ளை தேவை என்பதை கான் யூ பைண்டே சேர்வன்ற் கேர்ள் பிறம் அப்கன்ரி ரி சைற் என வடமாகாணத் தமிழர்களில் சிலர் நடந்து கொண்ட விதத்தை மூடிமறைக்க முடியாது.அவர்களை எப்போதாவது தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லியிருக்கிறீர்களா?,எழுதியிருக்கிறீர்களா?

இந்தியா இலங்கையை தனது ஆளுமைக்குள் கொண்டு வருவதை எதிர்ப்போம்,எதிர்க்க வேண்டும்.எப்படித்தான் எமக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் சிங்களவர்கள் எமது அயலவர்கள் சகோதரர்கள் என்பதே யதார்த்தம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *