கட்டுரைகள்

அரசியல் பொல்லாக்கு தேவையா?….  ச.வி.கிருபாகரன், பிரான்ஸ்

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

“வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி ஆபத்தானது அல்ல – தொடரும் தைரியம்தான் முக்கியம்.” –

வின்சன் சேர்ச்சில், இரண்டாம் உலகப் போர் வேளையில், பிரித்தானிய பிரதமர்
அரசியல் என்பது – மக்கள் அல்லது குழுக்களுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தை நாம் ‘அரசியல்’ அல்லது ‘அரசியலைப் பற்றியது’ என்று கூறுகிறோம்.  உண்மையை கூறுவதனால், அரசியல் என்பது போட்டி பொறாமையை துண்டுவதறகான சூழ்ச்சி என்பதே உண்மை.
இங்கு நாம் அரசியல் என்ற விடயத்தை சரியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்விடத்தில் அரசியலின் தந்தையென அழைக்கப்படுபவர், கிரேக்க தத்துவஞானி, மற்றும் பல்துறை வல்லுநர் ஆனா அரிஸ்டாட்டில் (Aristotle). இவர் அரசியல் அறிவியலின் செயல்பாட்டு வரையறையை முதன்முதலில் கொண்டு அறிமுகப்படுத்தியவர்.
ஆரசியலை நாம் பல பிரிவுகளாக காணுகிறோம் – ஜனநாயகம். சர்வாதிகாரம், முடியாட்சி, இரண்டும் கலந்த கலப்பாட்சி போன்று வேறுவிதப்பட்டுள்ளனா. அரசியல் என்பது ஒரு சந்தையாகும், அங்கு சட்டபூர்வமான தன்மை திறனுக்கு எதிராக வர்த்தகம் நடைபெறுகிறது.
அரசியலின் கோட்பாட்டை பார்போமானால் –  இது சமூக அறிவியலின் ஒரு பிரிவாகும். அதாவது, குடியுரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான கருத்துக்களை ஆராய்கிறது. இவை அரசியல் தத்துவத்திற்கும் அரசியல் அறிவியலுக்கும் இடையிலான இணைப்பாக செயல்படுகிறது. இது அதிகாரம், மாநில நிர்வாகம், உரிமைகள், நீதி மற்றும் பொது நன்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறதோ அல்லது செய்ய முயற்சிக்கிறதோ என்பது இன்றும் தெளிவாகவில்லை.
அரசியலின் முக்கிய பங்களர்களான – நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை அகியவை, ஒன்றில்லாது மற்றவை செயல்பட முடியாது. இந்த மூன்று பங்களர்களும் இணைந்து எவ்வளவு தூரம் நன்றாக  செயல்படுகின்றார்களோ, அவ்வளவிற்கு அவ் நாட்டு மக்களின் சிறந்த வாழ்க்கை  உறுதிபடுத்தப்படுகிறது.
இவ்விடத்தில் நாம் ஒரு நாட்டின் ஆட்சி என்பது – ஜனநாயகமா அல்லது  சர்வாதிகாரமா?  முடியாட்சியா? முடியாட்சியாக மாறுகிறாதா? அல்லது பொது தேர்தல் என்ற பெயரில் நடைபெறும் இரண்டும் கலந்த கலப்பாட்சியா என்பதை உலகம், சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்காணிப்பில் இருப்பது வழமை.
இவ்விடத்தில் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பு நாட்டின் பிரஜைகளான மக்களிற்கு உண்டு. நடைபெறும் ஆட்சி பெரும்பான்யான மக்களிற்கு எதிராக காணுப்படும் பொழுது, மக்கள் அல்லது ஒரு குழு தாம் அகிம்சை அல்லது சாத்வீக முறையில் ஓர் சீர்கெட்ட அரசிற்கு எதிராக குரல் கொடுப்பதா? அல்லது இந்த நவீன நூற்றாண்டில் – வன்முறை அல்லது பயங்கரவாதம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில், ஆயுதம் ஏந்திய அரசிற்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்வதா என்ற நிலை உருவாகிறது.
அகிம்சை என்பது எவரும் பங்கேற்கக்கூடிய ஒரு இரத்த களரி அற்ற செயல் வடிவம் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், அகிம்சை போராட்டங்களின் பலா பலன்கள் யாவும் வன்முறைகளே. அதாவது இரத்தகளரிகளினால் மக்கள் பிதிகொள்ள படுத்தப்படுகின்றனர்.
இதற்கு இலங்கைதீவு வாழ் வடக்கு கிழக்கை தமது தாயாகமாக கொண்ட தமிழ் மக்களின் மூன்று தசாப்தங்களிற்கு மேலான அகிம்சை போராட்டம் மிக அருமையான ஊதரணமாக அமைகிறது.
உலகளாவிய ரீதியில் அகிம்சை போராட்டத்தின் பலவீனங்களிற்கு, சில ஊதாரணங்களை கொடுப்பதற்கு முன், கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களிற்கு முன், அகிம்சை போராட்டங்கள் உலகின் ஆசிய, ஆபிரிக்கா தவிர்ந்த மற்றைய பிராந்தியங்களில் சில வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன்றைய நூற்றாண்டில், அகிம்சை போராட்டம் என்பது எதிர்காலத்தில் நம்பிக்கை கொடுக்ககூடிய போராட்டமா என ஆய்வு செய்யும் பொழுது, இதற்கான பதில் கேள்வி குறியாகவே காணப்படுகிறது.
தற்போதைய உலகில், ஓர் அரசின் ஆதிக்கம் என்பது இராணுவ ரீதியாக பலவீனமான சமூகங்கள் / தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் சக்திவாய்ந்த தந்திரமாக காணப்படும் பொழுது, அகிம்சை போராட்டம் எப்படியாக வெற்றியடைய முடியும்?
உலகின் பல நாடுகளில், ஜனநாயகம் என்ற போர்வையில்,  ஜனநாயக விரோத செயற்பாடுகளான – மக்களையும் அவர்களது கலை, கலாச்சார, சமூக, பொருளாதார மேன்பாடுகளை, அரசின் பலத்தை கொண்டு  அடக்குவதற்கு  முன்வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் புரட்சியாளர்கள் – அடியுங்கள் உதையுங்கள் சிறையில் தள்ளுங்கள் கொலை செய்யுங்கள் தாக்குகிறோமெனும் அடிப்படையில் சென்றிருந்தால்,  இன்று ஏரித்தீரியா, கிழக்கு தீமூர், தென் சூடன், கோசவா போன்ற நாடுகள் தமது சுதந்திர போராட்டத்தில் வெற்றி கொண்டிருக்கா முடியாது.
அகிம்சையின் வெற்றி
1979ல் நடைபெற்ற ஈரானிய புரட்சியின் புரட்சி என்று அழைக்கப்படும் இஸ்லாமியப் புரட்சி அன்றை ஈரானிய முடியாட்சியை அகற்றியது. இவ் ஈரானின் அகிம்சை போராட்டத்தை கட்டுரையாளாரான நான், நேராடிய பார்க்கும் சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. அடுத்து, 1986 பிலிப்பைஸிலன் மக்கள் போராட்டம் அன்றைய  மார்கோஸின் சர்வாதிகாரத்தை வீழ்த்தியது
இதே போல், 1989ம் ஆண்டு,  செக்கோஸ்லோவாக்கியா,  கிழக்கு ஜெர்மனி, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா அகிய நாடுகளும் சுதந்திரம் பெற்றனா.
Iranian Revolution: Key Events Timeline
இதே போல் மத்திய கிழக்கில் ஆரம்பித்த “அரபு வசந்தத்தால்”   2010 முதல் 2011ம் ஆண்டுவரை – துனிசியாவில், 24 ஆண்டுகள் ஆட்சி செய்த ஜனாதிபதி ஜைன் எல்-அபிடின் பென் அலியின் பதவி நீக்கத்திற்கு வழிவகுத்தது. ஜனவரி  2011 அன்று தொடங்கி எகிப்தியர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், பிப்ரவரி 11 அன்று ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தன.
கர்னல் முயம்மர் அல்-கடாபியின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் 15 பிப்ரவரி 2011 தொடங்கின. ஆகஸ்ட்  2011 அன்று அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
அகிம்சை செயலிழந்துள்ளது
தற்போதைய உலகில் அகிம்சை வேலை செய்யாது என்பதற்கு பல ஊதாரணங்கள் இருந்தும், நாம் எமது இலங்கைதீவின் நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். போர் முடிந்து இன்று பதினைந்து வருடங்களாகியும், வடக்கு கிழக்கு வாழ் மக்களது அகிம்சை போராட்டங்களிற்கு எந்த சிங்கள பௌத்த அரசும், எமது அரசியல் தீர்விக்கு செவி சாய்த்ததாக சரித்திரம் இல்லை. அவர்கள் இன்று பௌத்தமத துறவிகளின் ஆலோசனையிலேயே அரசியல் செய்கிறார்கள.
முன்பு அயுத போராட்ட வெற்றியாக நடைபெற்ற வேளையில் சிங்கள பௌத்த அரசிடம் இருந்த செவிசாய்க்கும் தன்மை, மதிப்பு, இன்று தமிழ் மக்களிற்கு அறவே கிடையாது. இன்று எம்மை ஒரு ஏளன பொருளாகவே இலங்கைதீவின் தென் பகுதி அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். அன்று பங்கருக்குள் ஒளித்திருந்தி தெற்கின் அரசியல்வாதிகள், இன்று மோசமான இனத்துவேசம் பேசுகிறார்கள். இன்று எமது நிலைமை மிக மோசமாக பின்நோக்கியுள்ளது என்பதை தேர்தல்வாதிகளும் சிந்திப்பதில்லை கடந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான சமூக இயக்கங்களும் கிளர்ச்சிகளும் வெடித்துள்ளன. மக்கள் அகிம்சை வேலை செய்யாது என்பதை மீண்டும் மீண்டும் கற்றுக்கொண்டுள்ளனர்.
அகிம்சை சமூகத்தில், புரட்சிகர மாற்றத்தை அடைவதற்கும், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் வேர்களை அடைவதற்கும், அதிகாரத்தில் இருப்பவர்களை வீழ்த்துவதற்கும் அகிம்சை ஒரு வழியாகது என்பதை உலகில் அகிம்சை வழியில் தமது அரசியல் விடுதலைக்காக போராட்டங்களை நடத்தியவர்கள் உணர ஆரம்பித்து விட்டனர். இதற்கு பல ஊதாரணங்கள் உலகில் உண்டு.
சீனா: தியனென்மென் சதுக்க படுகொலைக்குப் பின் முப்பது ஆண்டுகள் - World Socialist Web Site
சீனாவில் ஏப்ரல் 1989 ம் ஆண்டு ஜூன் மாதம்  நீடித்த மாணவர்களின் தியனன்மென் சதுக்க அகிம்சை ஆர்ப்பாட்டங்கள், சீனாவின் பெய்ஜிங்கில் ஜூன் 3 ஆம் தேதி இரவு தியனன்மென் சதுக்கத்தை ஆக்கிரமிக்க சீன அரசாங்க துருப்புக்கள் படுகொலைகளை மேற் கொண்டுள்ளது.
சுயநிர்ணய உரிமை என்பது ஒரு இறையாண்மை கொண்ட அல்லது ஓர் தேசிய இனம் தன்னைத்தானே சுதந்திரமாக ஆளும் உரிமையை கோரும் ஒரு அரசியல் கொள்கையாகும். இந்த சுயநிர்ணயம் ஒருவர் தனது சொந்த உள்நாட்டுக் கொள்கையையும், பிற இறையாண்மை கொண்ட நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையையும் தீர்மானிக்கும் சுதந்திரமாகும். ஆனால் ஒரு புறத்தில் அகிம்சை போராட்டம் வலுவிளக்கும் போது, மறுபுறத்தில் சுதந்திரத்திற்கான ஆயுத போராட்டம் வலுவிளந்துள்ளதை நாம் காணக்ககூடியதாகவுள்ளது. இதற்கு சில ஊதாரணங்களாக :
பியாபரா (Biafara)
மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியாவிலிருந்து பியாபரா என்ற புதிய நாடு  1967ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி, பியாபரா குடியரசாக  பிரகடனபடுத்தப்பட்டு, 1967 முதல் 1970 வரை ஒரு சுதந்திரம் பெற்ற நாடாக திகழ்ந்துள்ளது. இவ் பியாபரா குடியரசை –  தான்சானியா, காபோன், கெயிட்டி, இவரி கோஸ்ட்,  சாம்பியா  போன்று பல நாடுகள் அவர்களது சுதந்திர பிரகடனத்தை ஆதரித்ததுடன்; இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா, அன்றைய ரோடீசியா இன்றைய சிம்பாபே, போர்த்துக்கல், பிரான்ஸ் போன்ற நாடுகளின்; இரகசிய இராணுவ ஆதரவையும் பெற்றறிருந்தது. ஆனால் துர்அதிஸ்டவசமாக கிட்டத்தட்ட மூன்று வருட போருக்குப் பின்னர், தொகையான பியாபரா மக்கள் இறப்புடன், பியாபரா நைஜீரியாவிடம் சரணடைந்தது.
பியாபரா மீது நைஜீரியாவின் அரச தலைவராகவும், தளபதியுமான ஜகுவுப்பு கோபோன் டான்-யும்மா  பியாபராவை அழித்த இராணுவத் தலைவராகவும் திகழ்கிறார். இவ் நைஜீரியாவின் தலைவரை  நான், ஐரோப்பாவில் சந்தித்து ஓர் நிண்ட உரையாடலை நாடாத்தியுள்ளேன். (படம்)
அத்துடன் ஸபெயினில் கத்தோலினியா, ரஷ்யாவில் செச்சினியா போன்று வேறு மக்களிற்கு நடத்தவற்றை நாம் மறக்க முடியாது.
ஸ்பெயின் நாட்டிலிருந்து  கத்தோலினியா சுதந்திர இயக்கம் 2017 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டலோனிய சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. ஆனால் துர்அதிஸ்டவசமாக மாபெரும் தோல்வியடைந்து, கத்தோலினியாவின் தலைவர்கள், மற்றைய ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
செச்சினியா மக்களை மோசமாக நடத்திய வரலாறு,  ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முந்தைய சுதந்திர வரலாறு ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகப் பயன்படுத்தி, செச்சினியா குடியரசாக சுதந்திரத்தை அறிவித்தது. செச்சென்யா மீது ரஷ்யா கட்டுப்பாட்டை மீட்டெடுத்துள்ளது, ஆனால் பிரிவினைவாத அரசாங்கம் இன்னும் நாடுகடந்து செயல்படுகிறது.
மகாத்மா காந்தி
அகிம்சை ஆசான்; சுதந்திர இந்தியாவின் தந்தை - மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று!அகிம்சை போராட்டத்தின் தந்தையாக கருதப்பட்ட மகாத்மா காந்திக்கு இன்று வரை நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு பிரித்தானியவின் முன்னாள் பிரதமர் வின்சன் சேர்ச்சில் மகாத்மா காந்தியின் போராட்டத்தின் விளைவுகள் “அகிம்சை போராட்டங்களின் பலா பலன்கள் யாவும் வன்முறைகளே” என கூறிய விடயம் இங்கு சரியாக நிருபிக்கப்படுகிறது.
1999ம் ஆண்டு டிசம்பர் மாதம நோர்வே நோபல் பரிசு குழு, மகாத்மா காந்திக்கு அமைதி பரிசுக்கு ஐந்து முறை (1937-1939, 1947, 1948) பரிந்துரைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
இலங்கைதீவில்
இலங்கைதீவில், தமிழ் மக்களின் தாயாகபூமியான வடக்கு கிழக்கில், கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேல் தமக்குரிய அரசியல் அபிலாசைகள் அற்று வாழும் தூர்பாக்கியத்தை உலகம் பார்த்தும் பாராது போல் உள்ளது.
அகிம்சை, ஆயுத போராட்டம் யாவும் தோல்வியடைந்த நிலையில், கடந்த பதினைந்து வருடங்களாக ஓர் அரசியல் தலைமைத்துவமின்றி, மலுமியில்லா கப்பல் போல் மக்கள் தமது எதிர்காலம் ஏதுவென தெரியாது வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த பதினைந்து வருடங்களில், தமிழ்மக்களிற்கு ஓர் உருப்படியான அரசியல்வாதி இன்றுவரை கிடைக்காதுள்ளது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம். ஆனால் தமிழ் தேர்தல்வாதிகளிற்கு இவ்விடயத்தில் எந்தவிதமான அக்கறை கிடையாது. அரசியல் தீர்வு கிடைத்து விட்டால், பின்னர் தாம் என்ன செய்வது என்ற அக்கறையோ தெரியவில்லை.
ஊதரணத்திற்கு மிக அண்மையில் சிங்கள பௌத்த அரசு, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கு கொடுக்கும் பிச்சை போல், மாகாணசபை தேர்தலை அறிவித்ததும், தேர்தல்வாதிகள் கூட்டு, கூட்டு முன்ணனி,  ஐக்கிய முன்ணனி போன்று ஆட்சேர்ப்புக்கள் ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் ஏழு தசாப்பதங்களா உரிமையின்றி உள்ள தமிழினம் பற்றியோ, கணிகள் பறிக்கப்பட்டவை பற்றியோ ஏன் ஒரு கூட்டு, கூட்டு முன்ணனி, ஐக்கிய முன்ணனி ஏற்படுத்தப்படவில்லை என்பதை இவ் தேர்தல்வாதிகள், மக்களிற்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
முன்பு ஒரு காலத்தில், சிறிலங்காவின் பாரளுமன்றத்தில், தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அவர்கள் நிட்சயம் வழங்கறிஞர்களாவே இருப்பார்களென்ற காலம். கடந்த 1990ன் பிற்பகுதியில்; நிலைமை மாறி, அரசியலோ தமிழ் உட்பட மொழி அறிவு அற்றவர்கள், பண்பற்றவர்கள் தமிழர் பிரதேசங்களில் யாரும் தேர்தலில் நிற்கலாம், யாரையும் பாரளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியும் என்ற காலம் தற்பொழுது காணப்படுகிறது.
இன்று உலகம் விசித்திரமாக பார்க்கும் ஓர் இனமாக, ஈழத்தமிழர்கள் உள்ளநாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளார்கள்.
ஆயுத போராட்டம் வெற்றியடைந்து ஓர் நடைமுறை அரசு, செவ்வயாக நிவர்த்தியாக நிறுவப்பட்டு காணப்பட்ட வேளையில், சிங்கள பௌத்த அரசுகள் சர்வதேசத்தை தமது நண்பர்களாக்கி, நோர்வே மூலம் போர் நிறுத்தம் என்ற போர்வையில், காலத்தை கடத்தி இறுதியில் போர்நிறுத்தம், ஆயுத போராட்டத்தின் முடிவிற்கு வாழிவகுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இங்கு நாம் ஓர் முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறிலங்காவின் சிங்கள பௌத்த அரசுகள் தமிழ் மக்களிற்கு எந்த அரசியல் தீர்வையும் கொடுக்க போவதில்லை. ஆனால், ஆயுத போராட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் போராளிகளிற்கு பலவிதப்பட்ட உதவிகளை செய்து, உலகிற்கு ஈழத்தழிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை தெரியப்படுத்திய இந்தியா, இறுதியில் தமிழீழ விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு துணை நின்றது என கூறுவதற்கு மேலாக அவர்களே இறுதி போரை நடத்தி, சிறிலங்காவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களின் நடவடிக்கையை ஓர் பழிவாங்கும் படலாமாக உலகம் பார்க்கிறது என்பது உண்மை.
நோர்வேயின் போர் நிறுத்தம்
இதேவேளை முன்பின் தமிழ் மக்களுடைய மொழி கலை கலாச்சாரம் பிராந்தியத்துடன் எந்தவித சம்பந்தமும் அற்ற நோர்வே, சமாதான தேவதை போல் வேசம் போட்டு, ‘மீனுக்கு வாலையும் பாம்பிற்கு தலையையும் காட்டி’ ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு மிக அழகாக திட்டமிட்டு வேலை செய்தார்கள். இவர்கள் சமாதான புறவாக வேசமிட்டு வரும் பொழுது இருந்த தமிழர்களின் நடைமுறை அரசை, வெற்றியாக அழித்துவிட்டு மிக மௌனமாக நோர்வே வெளியேறியாது.
இங்கு நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், போர் வேளையில் சிங்கள பௌத்த அரசிற்கான  – சிங்கள பௌத்த புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில்துறை நிபுணர்களின் பங்களிப்பு என்பது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிக பிரமாண்டமானது. ஆனால் எம்மிடையே ஓர் நடைமுறை அரசு இருந்த வேளையில், ஒரு சில புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில்துறை நிபுணர்கள் தவிர்ந்த மற்றையவர்கள் தமது வழமையான புசத்தலையும், பிழைபிடிப்புக்களையும் தொடர்ந்தார்களே தவிர, வேறு எந்தவிதமான பங்களிப்பையும் அவர்கள் தமது இனத்திற்காக செய்ய முன்வரவில்லை.
ஆகையால் எமது இன்றைய பாரிதபா நிலை தொடராது பார்த்து எமது விடுதலை நோக்கிய செயற்பாடுகளை செய்வதற்கு, எமக்குள்ள குறைபாடு என்பது – தமிழ்  புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில்துறை நிபுணர்களின் வரவும் ஆலோசனைகளும் ஆகும்.
போர் மிகவும் அக்கிரோசமாக நடந்து, கிழக்கு மாகாணம் பறிபோன வேளையில், தனிப்பட்ட முறையில் எமக்கு ஆதரவான தமிழர்கள் அல்லாத புத்திஜீவிகள், ‘தமிழீழ விடுதலை புலிகளை உடனடியாக தமிழீழ நடைமுறை அரசை ‘தனித்துவமான சுதந்திர பிரகடனத்தை’ (Unilateral Declaration of Independence – UDI)  செய்ய கூறுமாறு எமக்கு அறிவுறத்தினார்கள். இதற்குள் பல தத்துவங்கள் வழிமுறைகள் அடங்கியுள்ளனா. ஆனால் அவ்வேளையில் எமது தொடர்பாளர்களிற்கு இது பற்றி கூறிய செய்தி, உரியவர்களிற்கு சென்றடையவில்லை என்பதை காலம் சென்று அறிந்தோம்.
என்னால் 2008ம் ஆண்டு  ஓர் கட்டுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டது. அக்கட்டுரை முக்கிய உள்ளடக்கம் என்னவெனில், எமது நடைமுறை அரசிற்கு இல்லாத விடயங்கள் இரண்டே இரண்டு. ஒன்று தமிழீழத்திற்கான சொந்த பணம், இரண்டாவதாக சுதந்திர பிரகடனம்.
தற்பொழுது, எமது சாதாரண தமிழர்களிற்கு தெரிந்தது தேர்தல். அது பிரதேசசபை, மாநாகரசபை, மாகாணசபை போன்றவை. இவையும் இல்லையானால் கோயில்கள், பாடசாலைகள்,  விளையாட்டுதுறை போன்று வேறுபட்ட சங்கங்களிற்கான தேர்தல். இது இவர்களது பொழுது போக்க, அறியமையா என புரிந்து கொள்வது மிக கடினமாகவுள்ளது.
அரசாட்சியை யாரும் செய்யலாம், ஆனால் அவ் அரசாட்சியை ஒழுங்காக செவ்வாயக செய்வதற்கான ஆலோசகர்கள் தான் எமது இனத்திற்கு மிக முக்கியமும், தட்டுபடான விடயம். இவற்றை தவிர்த்து, ஆலோசகர்களை ஆட்சி செய்ய துண்டுவது என்பது, அண்மை காலமாக ஈழத்தழிழர்களின் புதிய கண்டுபிடிப்பாகவே தெரிகிறது. இவ் வழிமுறையால், ஏற்கனவே ஏற்பட்ட சிக்கல்கள், அவமானங்கள், போட்டி பொறமைகள் ஒரு புறமும், மறுபுறும் உயிர் ஊஞ்சலாடும் நிலைமைகளும் ஏற்பட்டுள்ளனா!
நீதிபதி என்பவர் வழங்கறிஞர்களுடன் உரையாடுவது சர்வசாதரணமான விடயம். இதற்காக ‘நீதிபதி என்னுடன் ஆலோசித்தாரென’ ஒரு வழங்கறிஞர் கூறுவாரேயானால், அது அவ் வழங்கறிஞரின் வாங்குறோட்டு நிலையையும், பீதியையும் வெளிப்படுத்துவதேக கருத முடியும். ‘வண்டிகள் செல்லும் பொழுது நாய்கள் குலைப்பது வழமை’.
இவ்வேளையில், முன்னாள் அமெரிக்கா ஜனதிபதி, ஏபிரகாம் லீங்கன் கூறிய ஓர் கருத்து நினைவில் வருகிறது – “எல்லோரையும் சிலவேளைகளிலும், சிலவேளைகளில் எல்லோரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லோரையும் எல்லாவேளையிலும் மடையர் ஆக்க முடியாது” என கூறியுள்ளார்.
 (முற்றும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *