உலகம்

ஷேக் ஹசீனாவை அழைத்து வர இன்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்

ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து அழைத்து வர இண்டர்போல் உதவியை பங்களாதேஷ் அரசாங்கம் நாடியுள்ளது பங்களாதேஷில், மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அவர், புதுடில்லியில் அதி உயர் பாதுகாப்புடன் தங்கியுள்ளார்.

இந்தநிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களாதேஷ் நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து அவர் திருப்பியனுப்பப்படவேண்டும் என்று கோரியுள்ள பங்களாதேஷ் அரசாங்கம், இண்டர்போல் உதவியையும் நாடியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *