இலங்கை

அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாட்டுக்கு பொன்சேகா பாராட்டு

ஊழல் வலையமைப்புக்கு முழுமையாக முடிவு கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.
அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய முயற்சி எடுக்கப்படுவதை மதிக்கின்றோம்: வரவேற்கின்றோம்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேவேளை கடந்தகால அரசாங்கங்கள் பயணித்ததைவிட தற்போதைய அரசாங்கத்தின் பயணம் சிறப்பாக உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கதான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவரை சிறையில் அடைத்தபோது கவலை அடைந்தேன். எனினும், இதன்மூலம் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியது. நாட்டில் அனைவருக்கும் ஒரே கரண்டியில்தான் பகிரப்படுகின்றது என்பதே இதன்மூலம் வழங்கப்பட்ட செய்தியாகும். இதனை நாம் மதிக்க வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *