உலகம்

புது டெல்லி குண்டு வெடிப்பு; சந்தேகத்தின் பேரில் 3 வைத்தியர்கள் கைது!

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளால் மூன்று வைத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புது டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு (Red Fort) அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில், போக்குவரத்து சிக்னல் கம்பம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

காரில் இருந்த நபர் ஒரு தற்கொலைக் குண்டுதாரியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், அவரும் ஒரு வைத்தியர் என இந்தியப் பாதுகாப்புப் படைகள் சந்தேகிக்கின்றன.

எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *