உலகம்

புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சுரங்க பணிகள் தொடங்கினால், எங்களது வனம், நீர் வளம், நிலம் ஆகியவை அழியும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதுடன் அதிகாரிகள் யாரையும் கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தரம்​ஜாய்​கர் என்ற பகுதியில் புரங்கா கிராமம் அருகே அதானி நிறு​வனம் நிலக்​கரி சுரங்​கம் அமைக்​க​வுள்​ளது.

இதற்கு இப்​பகு​தி​யைச் சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் எதிர்ப்பு தெரி​விப்​ப​தால், அவர்​களிடம் கருத்து கேட்​கும் கூட்​டத்​துக்கு  ஏற்​பாடு செய்யப்​பட்​டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *