இலங்கை
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : யாழில் மூவர் அதிரடியாக கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()