இலங்கை

தமிழ்ச்செல்வனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவிலில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஆறு போராளிகளினதும் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் மாவீரர் சேரமானின் புதல்வர் றுஷாந்தன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நினைவுரை ஆற்றினார்.

மேற்படி நிகழ்வில் கொக்குவில் பிரம்படிப் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மு.ஈழத்தமிழ்மணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *