இலங்கை

கடந்த அரசாங்கங்களை விட NPP அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள மக்கள்!

தற்போதைய அரசாங்கம் ஊழலை நிவர்த்தி செய்வதில் திறம்பட செயல்படும்
என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் நம்புவதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த அரசாங்கங்கள் ஊழலை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதாக 12.5 சதவீதமானோர் நம்பியதாகவும் அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களுக்கு ஊழல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக முன்னாள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. முன்னதாக பிரிந்து சென்ற சில கட்சிகள் தற்போது கூட்டணி அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

இவை அனைத்தும் தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக மேற்கொண்டுள்ள
நடவடிக்கையின் விளைவாக இடம்பெறுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *