இலக்கியச்சோலை

மெல்பேர்ணில் வெளியான ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் !

மெல்பேர்ண் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்களின் வெளியீடு அக்டோபர் 25ம் திகதி சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வு திரு. பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில்,வெர்மான்ட் மேல்நிலைக் கல்லூரியின் வலென் மத்திய கலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் அறிமுக உரையை திரு. ரமேஷ் பாலா அவர்கள் உரையாற்றினார்.

அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை மெல்பேர்ண் இலக்கிய ஆர்வலர்கள் வழங்குவார்கள். தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள் எனும் நூலுக்கு திரு. ராஜா கருப்பையா அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார்.

ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும் என்ற நூலை
திருமதி. நித்யா தர்மசீலன் அவர்கள் நூலாய்வுரை ஆற்றினார்.
முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் குறித்த நூல் ஆய்வை திரு. ஜூட் பிரகாஷ் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் குறித்த ஆய்வை
திரு. ருத்ராபதி அவர்கள் நிகழ்த்தினார். அத்துடன் இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள் பற்றிய நூலாய்வை திரு. ஆவூரான் சந்திரன் சார்பில் செல்வி. அபிதாரினி சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார்.

மேலும் தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் என்ற நூலை திரு. கிறிஷ்டி நல்லரட்ணம் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார். அத்துடன் இந்நிகழ்வில் சிறப்புரையை மெல்பேர்ண் புகழ் சட்டத்தரணி திரு. ரவிந்திரன் அவர்களும் உரையாற்றினார்.

பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட மெல்பேர்ண் மாநகரில் நிகழ்ந்த இந்நூல் வெளியீட்டு நிகழ்வை திரு. அபர்ணா சுதன் சிறப்புற ஒருங்கமைத்து உரையாற்றினார். மற்றும் செல்வன். விக்னேஷ் சிவகுமாரன் நன்றியுரை ஆற்றினார் நிகழ்வில் இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *