கட்டுரைகள்

தீபாவளிப் பண்டிகை தமிழருக்குரியதா?…  உண்மை எது என்பதை அறிவு பூர்வமாகக் கண்டு பிடியுங்கள்…. சின்னத்தம்பி குருபரன்

தீபாவளிப் பண்டிகை தமிழருக்குரியதா?…  உண்மை எது என்பதை அறிவு பூர்வமாகக் கண்டு பிடியுங்கள்…. சின்னத்தம்பி குருபரன்

இராவணன், நரகாசுரன் இருவரும் வீரம் தீரம் அறம் நிறைந்த தமிழ் மன்னர்கள். மக்களால் போற்றிப் புகழப்பட்டு நாட்டில் நல்லாட்சி நடத்தியகள். பாதகங்கள் செய்த தேவர்களை எதிர்த்தவர்கள். அதனால் அவர்கள் இருவரும் திட்டமிட்டு அசுரர்களாக்கப்பட்டார்கள். நமது தமிழ் கடவுளர்களான திருமால் முருகனை ஆரிய, பிராமண, திராவிடர்கள் தமது கடவுளர்களாக வலிந்து தமதாக்கிக் கொண்டனர். தமிழ் மன்னர்களையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதற்காக அவர்களால் திட்டமிட்டு எழுதப்பட்டதே வேதங்கள் ஆகமங்கள் புராண இதிகாசங்களாகும்.

இராமர் இராவணனை வதம் செய்து அயோத்திக்கு மீண்ட நாளில் தீபம் ஏற்றி வரவேற்றதைத் தீபாவளி நாளாகக் கொண்டாடினர். அதேபோல் திருமால் நரகாசுரனை வதம் செய்த நாளைத் தீபாவளி நாளாகக் கொண்டாடினர்.

நரகாசுரனை விடுங்க... தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்... ஐதீக காரணங்களும்....  வரலாற்று குறிப்புகளும்! | Diwali mythological reasons and historical  references - kamadenu tamilதமிழ் கடவுளாகிய முருகனைச் சுப்ரமணியனாக்கி ஆரியர்களின் கடவுளாகிய தெய்வேந்திரனின் மகள் தெய்வானை என்ற கற்பனைக் கதாமாத்திரத்துக்குத் திருமணம் செய்து வைத்து முருகனைத் தமது கடவுளாக்கித் தமிழ் பெண்ணாகிய வள்ளியை வேடுவப் பெண்ணாக்கி இழிவு படுத்தினார்கள்.

உலகில் முதலில் தோன்றிய தமிழ் மொழியைத திராவிட மொழிக் குடும்பத்துக்குள் இணைத்துத் தமிழ் மொழியை அதற்குள் இணைத்துச் சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் மொழியைப் பின்தள்ளி விட்டார்கள். தமிழ் மொழிக் குடும்பத்துக்குள் அடங்க வேண்டிய திராவிட மொழிகளில் உன்றாகிய சமஸ்கஜருததை முதன்மைப்படுத்துவதற்காகத் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் மதமாகிய சைவத்தை ஆதிசங்கரராகிய பிராமணரைக் கொண்டு இந்து மதம் என்றவரலாற்று சிறப்பு மிக்க தீபாவளி கொண்டாட்டம் | tamil news Deepavali Festival ஒன்றை உருவாக்கி, ஆறு மதப் பிரிவுகளுள் ஒன்றாகச் சைவத்தைப் இணைத்து மதப் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். உலகின் முதலில் நாகரிகமாக வாழ்ந்த மக்களாகிய தமிழர்கள் சகல கடவுளர்களையும் இணைத்துச் சைவத்தைப் போற்றினர். அவர்கள் எதையும் பிரிக்கவில்லை. சாதி வேறுபாட்டைக் கைக்கொள்ளவில்லை. பொது ஆண்டுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் இருக்கு வேதத்தில் புருஷ சூத்மம் என்ற பிரிவை உருவாக்கி அதனூடாக மக்கள் மத்தியில் சாதிப் பிரிவினை என்ற நோயைப் பரப்பி வந்தாகள். அது இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

தீபாவளிப் பண்டிகையைச் சமணர்கள், சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர். அவர்கள் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ இழிவுபடுத்தாமல் கொண்டாடி வருகின்றனர். தேவர்களின் பாதகங்களை எதிர்த்து, நல்லாட்சி நடத்திய தமிழ் மன்னர்களைத் தமிழ் கடவுளர்களைக் கொண்டு வதம் செய்வித்து இழிவுபடுத்திய நாளைத் தமிழர்கள் தீபாவளி நாளாகக் கொண்டாடுகின்றனர். நாமும் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு பல பாண்டிய, சோழ மன்னர்களின் வரலாறுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆரிய, பிராமண, திராவிடர்கள் தமிழ்நாட்டை இன்றுவரை ஆட்சி செய்த திராவிட அரசைக் கொண்டு தமிழர்களின் வரலாற்றுச் சான்றாதாரங்களில் பெரும்பாலானவற்றைத் திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவே இலங்கையிலும் பின்பற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. ,இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்குப் போதிக்கப்படும் வரலாறு பாடத்தில் தமிழ் மன்னர்களைத் போரிலே வெற்றி கொண்ட சிங்கள மன்னர்களின் வீரதீர சாகசங்கள், புகழ், செய்த சேவைகளுக்கு முன்னுரிமையளித்து சிங்கள வரலாறு எழுதப்பட்டிருக்கின்றன.

தித்திக்கும் தீபாவளி

இன்றுவரை தமிழகத்தில் ஒரு தமிழனை முதமைச்சராக ஆட்சி செய்ய விடாத ஆரிய, பிராமணிய திராவிடர்கள் இலங்கையிலும் இதே கொள்ளையைப் பின்பற்றினர். தமிழ்நாட்டில் தமிழன் ஒருவன் ஆட்சி செய்வதை விரும்பாத இவர்கள் இலங்கையிலும் தமிழர்களுக்குத் தனிநாடு கிடைப்பதைத் தடுத்து, சிங்களத் தலைமைகளான நாயக்கர், நாயர் வம்சத்தினருக்கு சகல ஆதரவுகளும் வழங்கி 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை நிறைவு செய்தனர்.

நரகாசுரனை விடுங்க... தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்... ஐதீக காரணங்களும்....  வரலாற்று குறிப்புகளும்! | Diwali mythological reasons and historical  references - kamadenu tamilதமிழ்நாட்டில் வாழும் மக்களில் 40 வீதத்துக்கு மேற்பட்டோர் ஆரிய, பிராமணிய திராவிடர்களாவர். அவர்கள் கொண்டாடிவரும் தீபாவளிப் பண்டிகையைத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் போல, ஒப்ப, புரைய என்பதற்கிணங்க கொண்டாடி வருகின்றனர். இலங்கையிலும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களே பெருமளவு இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஏனைய சைவ மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் சில இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டில் தட்டக்களப்பு மாநகர சபை புதிய கல்லடிப் பாலத்துக்கருகில் ஒளியூட்டி விசேடமாகக் கொண்டாடினர்.

பெரும்பாலும் எப்படி ஏன் எதற்கு எனக் கேள்வி கேட்காமல் பலவற்றைப் பின்பற்றி வருகின்றனர்.

உண்மையைத் தேடுங்கள் சத்தியம் புரியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *