மெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் 6 நூல்கள் வெளியீடு


மெல்பேர்ண் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வலென் மத்திய கலை மண்டபம், வெர்மான்ட் மேல்நிலைக் கல்லூரி, 27-63 மொராக் சாலை, வெர்மான்ட், விக்டோரியா 3133. (Fallon Centre Auditorium,Vermont Secondary College, 27-63 Morack Road, Vermont VIC 3133) எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1600 முதல் 1900 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

![]()