பலதும் பத்தும்

நுரையீரல், மூளைக்கு ஆபத்தாக மாறும் மைக்ரோபிளாஸ்டிக்

மைக்ரோபிளாஸ்டிக் (Microplastic) எனப்படும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உடலில் ஒக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) ஏற்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

ஆய்வகச் சோதனைகள் மற்றும் எலிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அழுத்தம் வயதாதல் மற்றும் உறுப்புச் சேதத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு உயிரியல் நிகழ்வாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மைக்ரோபிளாஸ்டிக் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி, கவலைக்குரிய வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும் என ரோயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனம் (Royal Melbourne Institute of Technology) மற்றும் மெக்குவாரி பல்கலைக்கழகத்தைச் (Macquarie University) சேர்ந்த மருத்துவர் ஸ்காட் வில்சன் (Dr. Scott Wilson) தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக 5 மில்லி மீட்டருக்கும் குறைவான இந்தச் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள், நானோ துகள்களாக உடைக்கப்படும்போது, அவற்றைச் சுவாசிக்கும்போது நுரையீரலில் சிக்கிக்கொள்ளக்கூடும்.

அறிவியல் ஆதாரங்களுக்கமைய, இந்த நானோபிளாஸ்டிக்குகள் மூளையில் உள்ள நரம்புகளின் தகவல் தொடர்பைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்புடையவை என்பதையும், அல்சைமர் (Alzheimer’s), பார்கின்சன் (Parkinson’s) மற்றும் மோட்டார் நியூரோன் (Motor Neuron) போன்ற நோய்களைத் துரிதப்படுத்தும்.

நமது வாழ்வில் பிளாஸ்டிக்கின் அளவு 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 200 மடங்கு அதிகமாக உள்ளது.

பிளாஸ்டிக்கில் உள்ள 13,000 முதல் 16,000 இரசாயனங்களில் பெரும்பாலானவை பாதுகாப்புக்காகச் சோதிக்கப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்” என மருத்துவர் ஸ்காட் வில்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *