இலங்கை

இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியவரின் வீடு சுற்றிவளைப்பு; யாழில் அதிகாலையில் பதற்றம்! இருவர் கைது

யாழில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

குறித்த சோதனை இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சோதனை நடத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *