பலதும் பத்தும்

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு. எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து  கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button