‘கானல் நீதி’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற உரையாடல்!

திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவுகூரும் ‘கானல் நீதி’ எனும் தொனிப்பொருளில் உரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியர் மனோகரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், அரசியல் செயற்பாட்டாளர் இ.ரஜீவ்காந், பத்திரிகையாளர் அ.நிக்ஸன், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் கலாநிதி.தி.விக்னேஸ்வரன், ஜக்கிய சேசலிஷ கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரெரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இ.ரஜீவ்காந் உரையாற்றுகையில், அப்பாவி மாணவர்கள் மற்றும் எனது நண்பர்கள் கண்ணுக்கு முன்னே கொலை செய்யப்பட்டனர். திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பமானது. Dr.மனோகரன் இறந்து விட்டார். ஐந்து மாணவர்களின் கொலை சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் உதவினார். ஆனால் இப்போது அவர் இல்லை என்றார்.

மேலும் நிலாந்தன் கருத்து கூறுகையில், அரசியலாக நாம் பிரச்சினைகளை கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். செம்மணி, நாவற்குழி போன்ற பல்வேறு வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எம்மிடம் நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சி இல்லாது உள்ளது. நீதிக்கான போராட்டத்தில் அரசின் கூட்டமைப்பிடம் தான் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
நீதிக்கான தேடல் இருக்கும் போது இன அழிப்பின் தலைமை தாங்கிய ஒருவருக்கே நாம் மீண்டும் வாக்களித்திருக்கிறோம். இது ஒரு மிதமான முரணாக காணப்படுகிறது.
நிலைமாறு கால நீதி இறந்து விட்டது. நாம் அரசாக சிந்தித்து தந்திரோபாயத்தை கையாள வேண்டும். நாம் பிராந்தியத்தையும், நாடுகளையும் நட்புடன் பலப்படுத்த வேண்டும். அதனூடாகவே நாம் எமது போராட்டத்தை வெல்ல முடியும் என்றார்.
இந்நிலையில் நிக்சன், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான சரியான சாட்சியங்களை நாங்கள் இன்னமும் முழுமையாக திரட்டவில்லை. ஊழலை விசாரிக்கும் தலைவரான சிமாம்போ கடந்த வாரம் இலங்கை நீதித்துறையை நம்ப முடியவில்லை என ஒரு பத்திரிகையில் கூறியுள்ளார்.
சம்பந்தன் செம்மணி படுகொலைகளை எதிர்த்தார். ஆனால் நாடாளுமன்றில் படுகொலைகளை புரிந்தவருக்கே ஆதரவு வழங்கினார்.
நாங்கள் தொடர்ச்சியாக கட்சி அரசியலை செய்து வருகிறோம். நாம் தொடர்ச்சியாக கட்சி அரசியலை மேற்கொண்டு சந்திரிகா, மைத்திரிபால, ரணில் என கட்சி அரசியலுக்குள் நிண்டு கொண்டு சர்வதேச நீதி கோருகிறோம். இவற்றில் பயனில்லை. கட்சி அரசியலுக்கு அப்பால் எவ்வாறு செயற்படப்போகிறோம்.
மலிந்த முறகொட, மங்கள சமரவீர என பலர் வெவ்வேறு கட்சிகளைக் கொண்டவராக இருந்தாலும் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களுக்குள் தங்களுக்குள் கட்டமைத்து கொண்டு எதிராக செயற்படுகின்றனர். ஆனால் தமிழ்க் கட்சிகள், அரசியல்வாதிகள் அவ்வாறு செயல்படுவதில்லை.
அரசு அற்ற சமூகமாக கஜேந்திரகுமார், சுமந்திரன் போன்றவர்கள் இணைந்து செயற்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செயற்பட அவர்கள் தயாராக இல்லை எனது தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் கலாநிதி.தி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், எம்மிடம் சுதந்திரவேட்கை இருக்கின்றது. ஆனால் ஒற்றுமையாக அதைக்கேட்டு செல்லும் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை. தற்போதைய அரசாங்கம் காணாமல் போனோருக்கான தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை. சிங்கள பெளத்த கட்டமைப்பு தமது சிறுபான்மை மக்களுக்கு நீதியை வழங்க முடியாது. ஆனால் இது எந்த சிங்கள தலைவர்களாலும் முன்னெடுக்க முடியாது.
இவற்றுக்கு எதிராக செயற்பட எம்மிடம் எவ்வித உண்மையான கட்டமைப்பு கிடையாது ஒற்றுமையாக செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது.
அரசாங்கம் ஒன்றும் இல்லாத மாகாண சபையைக்கூட தருவதற்கு கடுமையாக யோசித்து பின்னடிக்கிறது. இதன் மூலம் அரசின் உண்மையான முகம் தெரிகிறது. எம்மிடம் சகல ஆவணங்களும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.
செம்மணி படுகொலை இடம்பெற்ற காலத்தில் கபினட் அமைச்சராக செயற்பட்டவர் தொடர்பில் தற்போது ஜனாதிபதியாக உள்ள அநுர அது தொடர்பான குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
மேலும் கஜேந்திரகுமார் கருத்து கூறுகையில், இன அழிப்பு தொடர்பில் சர்வதேசத்திற்கு வாக்குமூலம் அளித்தேன். ஐ.நா மனித உரிமை பேரவையில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை அல்ல என நான் கூறினேன்.

2015 ois என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்ட தற்போது சர்வதேச அரங்கில் தகவல்களை சேகரிக்கும் சந்தர்ப்பமாக ois இற்கு சாட்சியங்கள் வழங்கினேன். நான் வழங்கிய சாட்சியங்களில் புலிகளின் நடேசன், புலித்தேவன் மற்றும் பத்மநாதன் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர் என்றும் போர் நிறுத்துமாறு அரசாங்கத்துடன் பேசி பொறிமுறையை உருவாக்கித் தருமாறும் கூறினர்.
பசில் ராஜபக்சவும், மகிந்தவும், பாதர்கள் சிலரும் இணைந்து மக்களை பாதுகாக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. மே 16 இது இடம்பெற்றது. வேறு தரப்புக்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு இலட்சத்திற்கும், ஒன்றரை இலட்சத்திற்கும் இடைப்பட்ட மக்களை மீட்க இந்த முயற்சி எட்டப்பட்டது. ஆனால் கடைசிக் கட்டத்தில் ஆட்லறிகளை வைத்து குறித்த பகுதிக்குள் தாக்குதலை மேற்கொண்டு மக்களை அழித்தனர். இதன்போது குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதனை 16 ஆம் திகதி புலிகள் நேரடியாக கூறினர்.
இந்த இன அழிப்பு தொடர்பாக சம்பந்தன் மூன்று தூதர்களுக்கு கூறுமாறு கூறினார். நான் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய தூதரகங்களுக்கு கூறினேன்.
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை. எனது அறிவிற்கு icc தான் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
![]()