கட்டுரைகள்

ஆபிரிக்காவின் புதிய கலங்கரை விளக்கு இப்ராகிம் ராரோற….  ஏலையா க.முருகதாசன்

புஸ்கினோ பஸோவின் ஜனாதிபதியான 37 வயதே நிரம்பிய இப்ராகிம் ராறோ ஒரு புதிய எழுச்சியை தனது நாட்டில் விதைத்து வருகிறார்.அது ஆபிரிக்க நாடுகள் எங்கும் பரவி பயிராகிக் கொண்டு வருகின்றது.

இந்த வயதுடையவர்களில் ஒருசிலரே அரசியலில் புதிய வரலாற்றை எழுதுபவர்களாக இருப்பார்கள்.

இந்த ஜனாதிபதியைப் பற்றி பல பதிவுகளை எனது முகநூலில் பகிர்ந்திருந்தாலும்,அவரைப் பற்றி திரும்பத் திரும்ப எழுத வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் எனக்கு ஏற்படுகின்றது.
அது ஏன் என்று சிந்தித்தால் தன்னாட்சி, சுயாட்சி என்பதின் மீதும்,தற்சார்புக் கொள்கை மீது ஒரு நாடடு மக்களின் வாழ்வியலைக் கட்டி எழுப்புகின்ற எவராகினும் அத்தகையான அரசியலாளர்களை போற்ற வேண்டும் என்ற எண்ணமும் மகிழ்ச்சியும் ஏற்படுவது இயற்கையே.

மக்கள் நலனுக்காகவும் அவர்களின் வளமான வாழ்க்கைக்காவும் சட்டங்களை இயற்றியும் அச்சட்டங்களை கடைபிடிக்கவும்,மதிக்கவும் அவற்றை மீறும் பட்சத்தில் அதன் நியாயத்தை தாமாகவே உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்கின்ற பண்பினைக் கடைப்பிடிக்கும் மக்களைக் கொண்ட நாடே சிறந்த நாடாக இருக்க முடியும்.

ஆபிரிக்கா என்றவுடன் ஒரு காலத்தில்,அதாவது நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் கண்டங்களை பிரித்தறிவதற்காக பாடங்கள் மூலம்கூறப்பட்டபோதுஆசிய ,ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா,ஆபிரிக்கா (இப்பொழுது அமெரிக்கா வட அமெரிக்கா ,தென்னமெரிக்கா எனவும் துருவப் பகுதியை அண்டார்டிக்கா எனவும் பிரித்து ஏழு கண்டங்கள் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது)எனக் கூறப்பட்ட போது ஆபிரிக்காவுக்கு அடைமொழியாக தவறான பார்வையுடன் இருண்ட கண்டமென அழைப்பர் என ஆசிரியர்கள் எமக்குக் கூறியிருந்தனர்.

இருண்ட கண்டமென்றால் மனிதர்கள் யாருமே அங்கு போக முடியாத பயங்கரமான கண்டமாக அது இருக்குமோ என அப்பொழுது சிறுவயது பள்ளி மாணவர்களான நாம் நினைத்துக் கொண்டோம்.

ஆபிரிக்க மக்களின் கருப்பு நிறம் சார்ந்து மிகவும் மோசமான எண்ணத்துடன் அந்த மக்களை விளித்தே ஆபிரிக்காவை இருண்ட கண்டமென பாடநூல்களில் எழுதியிருந்தமையை நாம் அறியவில்லை.அவ்வாறு எழுதி அந்த மக்களை அவமதித்தார்கள் என்பதை நாம் அறியவில்லை.

கல்வியாளர்களான ஆசிரியர்களும் ஆபிரிக்க மக்களின் நிறங்களை வைத்து மனித நாகரீகமே வெட்கித்தலைகுனியுமளவுக்கு சொல்லப்பட்ட இருண்ட கண்டமென்ற அர்த்தம் தவறென்பதை எமக்கு உணர்த்தவில்லை. பெரும்பாலான மனிதர்களிடத்தில் நிறம் சார்ந்துஈ சாதி சார்ந்து காணப்பட்ட ஏற்றதாழ்வு அழுக்கு கல்வி கொடுத்த குருவான ஆசிரியர்களிடமும் காணப்பட்டமை கோபத்தைக் கொடுக்கின்றது.

ஆபிரிக்காவைப்: பற்றிக் கேள்விப்பட கேள்விப்பட இப்படியொரு வளமிக்க நாட்டையா ஆபிரிக்கர்களல்லாதவர்கள் கிஞ்சித்தும் மதிக்காமல் அம்மக்களை பிளாக்ஸ் என்று கேலியாக வெள்ளை நிறத்தவர்கள் எள்ளிநகையாடிக் கொண்டாடினார்கள் என்ற எமது அறிவு அத்தகைய பண்பு கொண்டவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தகின்றது.

ஆபிரிக்கக் கண்ட மண் பொன் விளையும் பூமி என்பார்களே அதற்கு ஒப்பானது. அம்மண்ணில் விளையாத, விளைவிக்க முடியாத பயிர் வகைகளோ பழவகை மரங்களோ கிடையாது.
ஆபிரிக்க மண்ணின் கீழ் கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.அவை விலை மதிக்க முடியாதவை.ஆபிரிக்க கண்டமென்பது அட்லான்ரிக் சமுத்திரம்,இந்து சமுத்திரம்,தென் சமுத்திரம் என மூன்று கடல்களால் சூழப்பட்டு அக்கண்டம் சார்ந்த தீவுகளையும் உள்ளடக்கி 54 நாடுகளைக் கொண்ட கண்டமாகும்.

ஓவ்வொரு நாட்டினதும் மண் வளம் தொட்டு பரந்த காடுகள்,ஆறுகள்,நீர் வீழ்ச்சிகள் என என இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளாகும்.

இக்கண்டத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் காணப்படுகின்ற ஒவ்வொருவிதமான கனிம வளங்களான பொன்,வைரப் படிமங்கள்,பிளாட்டினம்,யுரேனியம்,நிலக்கரி போன்றவை நவீன தொழில் வளர்ச்சிக்கும்,நிதி வளத்தை தீர்மானிக்கும் செல்வத்துக்கும் இவையே காரணமாகின்றன.

இந்தச் செல்வ இருப்புகளை சுரண்டுவதற்காக,ஆபிரிக்க மக்கள் விழிப்படையாதவர்களாக இருக்க வேண்டும் என்பதில் முதலாளித்துவ நாடுகள் ஆபிரிக்க மக்களை வறுமையில் வாழ அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களின் நிறமான கருப்பு நிறத்தையும் முன்னிறுத்தி அவர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற விம்பத்தை மிகப்பல ஆண்டுகளாக முன்னிறுத்தியமை இன்று நொருங்த் தொடங்கியுள்ளது.

ஆபிரிக்கா கண்ட நாடுகள் உணவுப் பஞ்சமற்ற நாடுகள் என்பதை எவராலுமே மறுக்க முடியாது.ஆனால் மிக நீண்ட காலமாக ஆபிரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சமிருக்கின்றது என்பதை முதலாளித்துவ நாடுகள் செயற்கையாக உருவாக்கின.

அவர்கள் நவீனத்துவத்தின் உதவிகளை அதன் அணுசரனைகளை அறியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதில் ஐரோப்பியர்கள் மிகக் கவனமாகவே சூழ்ச்சியினைச் செய்ததை முற்போக்குவாதிகள் உணரத் தொடங்கியதுடன் ஆபிரிக்க மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற மனப்புரட்சி அவர்களிடமிருந்து மெல்ல மெல்ல எழத் தொடங்கி அது பெரும் எழுச்சியாக மாறத் தொடங்கியது.

கருப்பு நிறத்தைக் கொண்ட ஆபிரிக்க மக்கள் மிக மோசமானவர்கள் என்றும் வெள்ளை நிறத்தையுடைய மக்கள் நல்லவர்கள் என்ற கணீப்பீடும் அபிப்பராயமும் உலகளவில் மக்களின் மனங்களிலும் அவர்களின் மூளையிலும் ஆழமாகப் பதியப்பட்டது.
ஆபிரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக ஐரோப்பியர்கள் மேற்கொண்ட பொருளாதாரச் சுரண்டல் சூழ்ச்சிகள் ஏராளம்.

இத்தனைக்கும் இவர்களின் சுரண்டலை எதிர்க்கும் நாடுகளும் இல்லாமலில்லை.; சுரண்டல் நாடுகள் மேல் வைக்கும் குற்றச்சாட்டுகளைச் சமன்படுத்துவதற்காகவும் நீர்த்துப் போகச் செய்வதற்காகவும் ஆபிரிக்க மக்களுக்கும்,அவர்களின் இளந்தலைமுறையினருனக்கும் கல்வி தொடங்கி பல்வேறு உதவிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் சரண்டலை மேற் கொள்கின்ற அந்தந்த நாடுகளின் பெயருடன் உதவிகளைச் செய்து வந்தனர்.
ஆனால் ஒவ்வொரு நாட்டினதும் மனித சமூகம் அறிவுணர் ரீதியில் காலத்துக்குக் காலம் வளர்ச்சசிப்படியை நோக்கியே சிந்தித்துச் செல்லும் என்ற இயற்கை விதிக்கமைய ஆபிரிக்க நாடுகளும் சிந்திக்க தொடங்கிய போது,ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார நிலை உட்பட அனைத்தையும் முக்கியத்தமற்றவையாகக் காட்டுவதில் மேற்கத்தைய ஒரு புதுவிதமான அணுகுமுறையை உலக மக்களுக்கு காட்டி வருகின்றனர்.

ஆபிரிக்க மக்களின் நிறங்களை முன்னிறுத்தியும் காய்ந்த வளமற்ற் புல்பூண்டற்ற மரம் செடிகொடிகளற்ற வரண்ட பூமியில் வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் படங்களை உகெங்கும் பரப்புரையாக்குவதுடன் அவர்களின் முகங்களை ஈக்கள் மொயத்துக் கொண்டிருக்கும் படங்களை விளம்பரப் படங்களாக வெளியிட்டு வருவதுடன் அவர்களுக்கு கல்வியையும் பொருளாதார ஏற்றங்களையும் கொடுக்கிறோம் என்ற பெயரில்,இவற்றையெல்லாம்,ஆபிரிக்க நாடுகளில் காணப்படும் வளங்களைச் சுரண்டும் போர்வையாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை ஆபுpரிக்க உலகம் புரிந்து விழித்துக் கொண்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க ஆபிரிக்க நாட்டு மக்களிடம் காணப்படும் பல்வேறு பிரிவுகளையும் அவர்கள் பேசும் மோழி பண்பாட்டு அடையாளங்களையும் கையிலடுத்த சுரண்டல்காரர்கள் அவர்களிடம் ஏற்றதாழ்வுகள் இருப்பது போலவும் அரசுகள் சிறுபான்மையினரை நசுக்குவது போலவும்,சுரண்டலாளர்களின் உளவுப் பிரிவுகள் அந்த மக்களை மூளைச்சலவை செய்து உள்நாட்டு ஆயுதக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி வந்தனர்.

ஓவ்வொரு தொண்டு நிறுவனங்களுக்குள்ளும்,உளவு நிறுவனப் பிரதிநிதிகளுமிருந்தனர்.அவர்கள் உதவியாளர்களாக தமக்கான பணிகளைச் செய்யும் அதே வேளை,தம்மைச் சந்திக்கும் மக்களின் அரசியல் சார்பு,அவர்கள் மூலமாக அந்நாட்டு அரசுபற்றிய அபிப்பராயங்கள் போன்றவற்றைச் சேகரித்து அதற்கமைய தமது சுரண்டலுக்குச் சாதகமான நகர்வுகளை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.

தம்மால் சேகரிக்கப்பட்ட அந்நாட்டு அரசுக்கெதிரான மக்களின் அபிப்பராயங்களையும் கருத்துக்களையும் தமது நாட்டுக்கு அனுப்பி வைக்க,அதற்கமைய அந்நாட்டில் கிளர்ச்சிகளை எவ்வாறு ஏற்படுத்தவது எனத் திட்டமிட்டார்கள்.

வலிமை பொருந்திய நாடுகளில் உளவு அமைப்புகள் என்பன ஒரு அமைச்சகமாகவே செயல்படுகின்றன.

தமது நாட்டு வளங்கள் சுரண்டப்படுவதற்காகவே ஐரோப்பிய முகவர்கள் பாதுகாவலர்களாக தமது நாடுகளுக்குள் நுழைந்து தமக்கு அபயம் அளிப்பவர்கள் என நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆபிரிக்க நாடுகள் தெளிவாக உணர்ந்து நிலையில்தான் புஸ்கினோ பஸோ என்ற நாட்டின் இராணுவக் கப்டன் இப்ராகிம் ராறோ புரட்சியின் மூலம் அந்த ஜனாதிபதியாக வந்து முழு ஆபிரிக்க நாடுகளுக்கும் தன்னெழுச்சி வழிகாட்டியாக மாறியுள்ளான்.

37 வயதேயான ஜனாதிபதி இப்ராகிம் ராறோவின் எழுச்சிப்புரட்சிக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல அனைத்து ஆபிரிக்க நாடுகளுமே இளம் ஜனாதிபதியுடன் கைனோர்த்து நிற்கின்றன.
இப்ராகிம் ராறோவை அந்நாட்டு மக்கள் தமக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடைவெளி வைத்து ஜனாதிபதி என்று பார்க்கவில்லை.இப்ராகிம் ராறோவைத் தமது சகோதரனாகவே பார்க்கிறார்கள்.இப்ராகிம் ராறோவும் நான் உங்களுடைய சகோதரன் என்றே சொல்லி வருகின்றார்.

எந்த நாட்டில் நாட்டின் தலைவன் மக்களுடன் கலந்து நிறங்கிறானோ அந்தத் தலைவனை,அந்நாட்டின் தலைவன் என்பதற்கப்பால் தமது குடும்பத்தவனாக அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்பதற்கு புஸ்கினோ பஸோ என்ற நாடு உதாரணம்.
தமது காலணித்துவ நாடாக இருந்த புஸ்கினோ பஸோவின் எழுச்சiயியும் தற்சார்புச் சிந்தனையையும் பிரான்ஸ் எதிர்பார்க்கவே இல்லை.

The case for Ibrahim Traoré: A Strategic Management case study, Africa must  ownஇப்ராகிம் முழு ஆபிரிக்க நாடுகளுக்குமே ஒரு முன்னோடி,ஒரு விடிவெள்ளி.ஆபிரிக்கர்கள் என்றவுடன் அவர்களின் நிறங்களை முன்னிறுத்தி ஏளனமாகச் சிந்தித்த உலக நாடுகள் சில அந்நாட்டின் அபிவிருத்திகள் கண்டு திகைத்து நிற்கின்றன.

புஸ்கினோ பஸோ தமகக்கான பணத்தை அவர்களே அச்சிடுகிறார்கள்:.அங்கு விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.மின்சாரக் கார்கள்,கைத்தொலைபேசிகள்,நவீன மருத்துவமனைகள்,நவீன கல்விக்கூடங்கள்,அழகிய வாழ்விடக் கட்டிடங்கள்,நவீன வீதிகள்,நவீன ரயில்கள்,ரயில் பாதைகள்,மிகையான விவசாய அபிவிருத்தி என வேகமாகத் தன்னை வளர்த்து வருகின்றது புஸ்கினோ பஸோ என்ற ஆபிரிக்க நாடு.

அதற்கு அச்சாணியாக இருப்பவர் 37 வயதே நிரம்பிய ஜனாதிபதியான இப்ராகிம்ராறோதான். .அந்நாட்டின் அமைச்சரவையும் ஒரே இலக்குடன் செயல்பட்டு வருகின்றது.

அடிக்கடி தனது நாட்டு மக்களுடன் உரையாடும் இப்ராகிம் ராறோ அந்நாட்டிற்கு ஒரு கலங்கரை விளக்கேயாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *