இலங்கை

தாஜுதினின் மரணம் நாமல் ஏன் குழம்புகிறார்?

வசீம் தாஜுதினின் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக்ஸ குழப்பமடைவதாகவும், இவ்வாறு குழப்பமடைவதற்குள் ஏதோவொன்று இருப்பதாக சந்தேகிப்பதாகவும் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மேலும் தெரிவிக்கையில்,

தாஜுதினின் மரணம் தொடர்பில் நாமல் இந்தளவுக்கு குழப்பமடையத் தேவையில்லை. அவர் குழப்பமடைவதற்குள் ஏதோவொன்று உள்ளது. தாஜுதினின் கொலை தொடர்பில் பாரதூரமான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக ராஜபக்ஸ குடும்பம் தொடர்புபட்டுள்ளதாக கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவின. இது தொடர்பில் முறையாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதனால் நாமலோ வேறு எவருமோ குழப்பமடையத் தேவையில்லை.

சகல விடயங்கள் தொடர்பிலும் முறையாக விசாரணை நடத்தப்படுகின்றது. குற்றமிழைத்தவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும். இதனால் குழப்பமடையாமல் இருக்குமாறு நாமலை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *