உலகம்

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன 4 வயது சிறுவன்: காட்டுப் பகுதியில் தீவிர வேட்டை

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன 4 வயது சிறுவனை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் 4 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் கஸ் லமண்ட்(August “Gus” Lamont) என்ற 4 வயது சிறுவன் சனிக்கிழமை அன்று காணாமல் போனார்.

இதையடுத்து அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு படை மற்றும் தெற்கு ஆவுஸ்திரேலியா காவல்துறை அதிகாரிகள் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவனின் குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *