இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – முன்கூட்டியே பிள்ளையானுக்குத் தெரியும்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் குறைபாடுகள் மற்றும் அலட்சியம் குறித்து தற்போது முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *