கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 22 ….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

பெரிய ஊராக இருந்தால் இரண்டு தேவாலயங்கள் இருக்குமோ என்னவோ? நம்ம ஊரில் ஊருக்கு பத்து கோயில்கள். அது தவிர அரசமரத்தடியிலும் ஆற்றங்கரைகளிலும் கோவில்கள். நடை பாதைகளிலும் நாற்சந்தியிலும் கோவில்கள் என்று எண்ணற்ற கோவில்கள். எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றேதான் என்றபடி இத்தனை கோவில்கள் இருந்தும் ஏழ்மையில் இருப்போரும் பிச்சைக்காரர்களுமே ஏராளம்.

இத்தனை கோவில்கள் இருக்கும் நாட்டில் ஏன் பெரும்பாலான மக்களை கடவுள் ஏன் அப்படி வைத்திருக்கிறார் என்று எண்ணினேன். அதற்கு அடுத்தாற்போல் இறைவனுக்காக மாதாமாதம் எத்தனை பண்டிகைகள் விழாக்கள் நடக்கின்றன. கடவுள் மனமகிழ்ந்து எதையும் செய்யவில்லையே? அப்போது ஒன்று எனக்கு புரிந்தது.

அதிகப் படியான வழிபடும் தளங்கள் இருப்பதற்கும் இடைவிடாது வழிபடுவதற்கும்
வளமான வாழ்வுக்கும் சற்றும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று புரியவந்தது. கடின உழைப்பின்றி கடவுளை வணங்குவதால் முன்னேற முடியாது என்பதும் புரிந்தது. அதைத்தான் வள்ளுவன் முயற்சி திருவினையாக்கும் என்கிறான்.

அடுத்ததாக விழாக்கள் பண்டிகைகள் என்றவுடன் ஒன்று நினைவில் வருகிறது. இங்குள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஆண்டுக்கு ஒன்றிரண்டு பண்டிகைகளே வருகின்றன. அந்த பண்டிகைகளும் வழிபடுமிடங்களில் நான்கு சுவர்களுக்குள் எந்தவித பெரிய ஆரவாரமுமின்றியே நடைபெறுகின்றன. பொதுவெளியில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப் படுவதில்லை.

அப்படி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பண்டிகைகள் நடபெறுவதாகத் தோன்றவில்லை. நடைபெற்றால் தெரியப் படுத்துங்கள். தெரிந்து கொள்கிறேன். அவர்கள் விரும்பினால் பெரும்பான்மையாக
அவர்கள் இருப்பதால் அவர்களின் மதம் சார்ந்த பண்டிகைகளை வீதிவரை கொண்டுவந்து பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம். வீதிகளை குப்பைக் காடாகவும் ஆக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

இவற்றை எல்லாம் பார்த்ததும் கடவுள் எவரையும் எதையும் செய்ய தூண்டவில்லை
என்பது விளங்குகிறது. அதற்காக நான் மதம் மாறவோ கோவிலுக்கு போக கூடாது என்றோ கட்டாயப் படுத்துவதாகவோ எண்ணாதீர்கள். அது அதற்கென்று தனி இடங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் எல்லாவற்றையும் செய்யக்கூடாது.

கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் நானும் கோவிலுக்கு செல்கிறேன். நான் கோவிலுக்கு போகும் காரணம் வேறு. நம் இல்லங்களில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்களின் படங்களை வைத்து நினைவு கூர்ந்து வணங்குகிறோம். உயிருடன் இருக்கும் பெரியோர்களை வணங்குகிறோம்.

அப்படி வணங்கினால் நமக்கு சொர்க்கம் கிடைக்கும் அல்லது வேலைவெட்டி இன்றி சும்மா இருந்தால் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நினத்தா வணங்குகிறோம்.

அதே போல் பல யுகங்களுக்கு முன்போ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ
தோன்றி வாழ்ந்நு மறைந்தவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிலர் வணங்குகிறார்கள். அல்லது புராணக்கதை என்றாலும் நம் முன்னோர்கள் நம்பி வணங்கிய பழக்கத்தை கண்மூடி பின்பற்றுகிறார்கள்.

யார் என்ன நினைத்து வேண்டுமானாலும் வணங்கட்டும். நான் நமக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது உண்மையோ புராணக்கதையோ எது எப்படி இருந்தாலும்
ஒரு வணக்கத்தை போட்டு வைப்பதில் என்ன குறைந்து விடப்போகிறோம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆலயங்களுக்கு வரும் வெள்ளையர்கள் சொர்க்கம் கிடைக்கும் அல்லது வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்றா வருகிறார்கள்?

மற்றபடி இயற்கை என்னும் பேராற்றல் தான் இறை. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பூதங்களை உள்ளடக்கிய பேராற்றலே இறை. இதையே வள்ளுவனும் விசம்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது என்றும் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காப் பெறின் என்றும் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு என்றும் இயற்கையின் முதன்மையை கூறியிருக்கிறார்.

சரி, கந்தசஷ்டிக் கவசத்துக்கு வருவோம். நான் ஆஸ்திரேலியா வரும்வரையிலும் ஏன் வந்த பின்னும் சில ஆண்டுகள் வரை தீவிரமாக முருகனை வணங்கினேன். இப்பவும் மருதநிலத்தை உருவாக்கி நம் இனத்தலைவனாக இருந்து வழிநடத்தினான் என்பதற்காக வணங்குகிறேன்.

மற்றபடி வீடுபேறு கிடைக்குமென்றோ உழைக்காமலோ ஊரை ஏமாற்றிவாழ அருள் புரிவான் என்பதற்காகவோ அல்ல. ஆதலால் கந்தசஷ்டி கவசம் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். பின் ஏன் இந்த மாற்றம்? இப்போதும் நான் நம்மை இயக்கும் பேராற்றலை ஏற்கிறேன். அதற்கு என்னிடம் மறுப்பேதுமில்லை.

ஆனால் சொர்க்கம் நரகம், பாவம் புண்ணியம், கடவுளிடம் முறையிட்டால் எல்லாம் நடந்துவிடும், விடாது தொழுதால் மேலுலகம் கிட்டும் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. நம்புபவர்களை நான் குறைகூறவும் இல்லை. மாறாக வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பதிலும் முற்பகல் செய்யயின் பிற்பகல் விளையும் என்பதில் மட்டும் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டவன்.

இப்போது என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்துக்கு காரணத்தை சொல்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு வந்தவுடன் இங்குள்ள தேவாலயங்களைப் பார்த்தேன். தேவாலயங்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே தென்பட்டார்கள். சிறுவர்களையோ வாலிப வயதுடை அங்கே அதிகமாக பார்க்க முடிவதில்லை. ஒரு ஊருக்கு ஒரு தேவாலயத்துக்கு மேல் இல்லை.

இத்தனை கோவில்கள் இருக்கும் நாட்டில் கடவுள் ஏன் பெரும்பாலான மக்களை காப்பாற்றவில்லை. அதற்கு அடுத்தாற்போல் இறைவனுக்காக மாதாமாதம் எத்தனை பண்டிகைகள் விழாக்கள் நடக்கின்றன. கடவுள் மனமகிழ்ந்து எதையும் செய்யவில்லையே?

விழாக்கள் பண்டிகைகள் என்றவுடன் ஒன்று நினைவில் வருகிறது. இங்குள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஆண்டுக்கு ஒன்றிரண்டு பண்டிகைகளே வருகின்றன. அந்த பண்டிகைகளும் தேவாலயங்களில் நான்கு சுவர்களுக்குள் எந்தவித பெரிய ஆரவாரமுமின்றியே நடைபெறுகின்றன. பொதுவெளியில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப் படுவதில்லை.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *