உலகம்

24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!

கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை.பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்தார்.

மேலும் ”மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார். பின்னர் குஜராத்தின் முதல்வரானார். பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது” என்று அமித் ஷா தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *