இலங்கை

184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன

சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது.

புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது.

உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை.

இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரிக்கப்பட்டனர்.

இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை.

இரண்டு ஆணைக்குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன். ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆணைக்குழுவில்சாட்சிகள் தெரிவித்திருந்தேன்.

இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது.

இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு, இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இந்த படுகொலையை உடனடியாக புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

அதே நேரத்தில் இந்த படுகொலை இடம்பெற்ற முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button