உலகம்

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகியுடன் ஒப்பிடுவதா; டிரம்ப் மீது ஜப்பான் பாச்சல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான சமீபத்திய தாக்குதல்களை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களுடன் ஒப்பிட்டு பேசியமைக்கு ஜப்பான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

நாகசாகி மேயர் உட்பட பல தலைவர்களும், குண்டுவெடிப்புகளின் கொடூரமான நினைவுகளை சுட்டிக்காட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். நாகசாகி மேயர் ஷிரோ சுசுகி,

ட்ரம்ப்பின் இந்தக் கருத்து அணுகுண்டு வீசப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருந்தால், குண்டுவீச்சுக்கு ஆளான நகரமாக தங்களுக்கு இது வருந்தத்தக்கது என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிரோஷிமாவில் உயிர் பிழைத்தவர்களும் பொதுமக்களும் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

ட்ரம்ப் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அணு ஆயுதப் பயன்பாட்டை நியாயப்படுத்தும் எந்த அறிக்கையையும் நிராகரிப்பதாகவும் ஹிரோஷிமா சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் ஹயாஷி யோஷிமாசா, அணுகுண்டுகள் குறித்த ஜப்பானின் நிலைப்பாட்டை அமெரிக்காவிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாக கூறினார்.

நோபல் அமைதிப் பரிசு வென்ற அமைப்பின் இணைத் தலைவரும், அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவருமான மிமாக்கி தோஷியுகி,

ட்ரம்ப்பின் கருத்துகள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று விமர்சித்தார். முன்னதாக ட்ரம்ப், ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள், இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களை போன்றவை என்றார்.

இரண்டாம் உலகபோரில் 1945 ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டு 70,000 பேரையும், அதற்கு மூன்று நாட்களுக்கு முன் ஹிரோஷிமாவில் 140,000 பேரையும் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button