கனடாவில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னமும் அதன் பாதகச் சாதகப் பார்வையும்! …. ஏலையா க.முருகதாசன்

மிக முக்கியமாக இந்தக் கட்டுரை கனடாவில் அமைக்கப்பட்ட இனவழிப்புச் சின்னம் பற்றிய எனது பார்வையாகும்.ஆனால் அதை நிறுவுவதற்கு இலங்கையில் இதுவுரை நடைபெற்ற இனமுரண்பாடுகளுக்கான காரணங்களையும் ஓரளவாவது தெளிவுபடுத்திச் செல்ல வேண்டியுமுள்ளது.
இந்நினைவுச் சின்னத்தால் எழும்,அல்லது தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருக்கப் போகும் கருத்துருவாக்கம்,இனவாத நெருப்பை விசிறிவிடுதல்,தவறான தமிழர்களுடைய புளகாங்கிதம் போன்றவற்றைக் கோடிட்டுக் காட்ட முயற்சிப்பதேயாகும்.
இவ்வாறான அவசரப்பட்ட செயல்கள் எமக்குக்: கொடுக்கிற மனத்திருப்தியையும்,நாம் இதுவரை காலமும் எதற்காக போராடினாமோ, எதற்காக எமது மக்களின் உயிர்த்தியாகங்கள், அர்ப்பணிப்புகள்,எமது பொருளாதார அழிப்புகள்,விதவைப் பெண்களாக்கப்பட்டமை, அங்கவீனர்களாக ஆக்கப்பட்டமை போன்றவற்றுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்று எண்ணுவோமானால் திருப்திபடுவோமானால் அதுவே எமது அறிவிலித்தனம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாயகத்தில் வாழும் தமிழுருக்கான சுதந்திரத்திற்காக தமிழர்களால் மேற்கொள்ளப்படும் அரசுக்கெதிரான அவசரச் செயல்பாடுகள் யாவும்,பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்களுக்கும் தமிழருக்குமிடையில் இடையில் முரண்பாடுகளை இன்னும் மோசமாக்கும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் உணர வேண்டும்.சிங்கள மக்களைத் தவிர்த்துவிட்டு அரசு சாத்தியமான நடைமுறைக் கொண்டுவர முடியாது.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தமிழுணர்வும் அவர்கள் தாயகத் தமிழர்கள் இலங்கையில் அனைத்து உரிமைகளுடனும் வாழ் வேண்டும் என்று எண்ணுவதும் அதன் செயல் வடிவத்தில் கொண்ட வரவேண்டுமென்பதற்காக பேரணிகளையோ,ஊர்வலங்களையோ,நினைவுகூரல்களையோ நடத்தவதில் தவறு இல்லை.
ஆனால் நினைவுச் சின்னங்களை நிறுவி அதனை முன்னிறுத்தி இலங்கை அரசுக்கெதிரான நிலைநிறுத்தல் குறியீடாக பிரச்சாரம் செய்யும் போது அதனுடைய பாதிப்பு புலம்பெயர் தமிழருக்கு ஏற்படாது,ஆனால் தாயகத் தமிழர்கள் நிச்சயமாக இதனால் பாதிக்கப்படுவார்கள்.புலமுஇபெயர் தமிழர்களின் அடுத்தடுத்த சந்ததிகள் அந்தந்த நாடுகளின் குடிமக்களாக மாறிவிடுவார்கள்.அவர்களுக்கும் இலங்கை என்பதும் தமது மூதாதையர் வாழ்ந்த இடம் என்பதும் அவர்கள் வந்து போகும் சுற்றுலூத்தஈலமே.ஆனால் அங்கே வாழையடி வாழையாக வாழப் போகும் சந்ததிகளுக்கு தொடர்ச்சியாக சிங்கள மக்களின் தொடர் பரம்பரையினருடன் முரண்படும் நிம்மதியற்ற நிலையையே உருவாக்கி வரும்.
இலங்கையில் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக அறவழியிலும் பின்னர் ஆயுதவழியிலும் போராடியிருக்கிறார்கள்.
அறவழிப்: போராட்டத்தின் தாக்கம் இலங்கை அரசையோ சிங்கள மக்களையோ பெரும் பாதிப்புக்குள் இட்:டுச் செல்லவில்லை.
ஆனால் ஆயுதப் போராட்டத்தால் தமிழர்களும் சிங்கள மக்களில் இராணுவத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் சரியான தவறானதா என்ற விவாதம் புத்திஜீவிகள் மத்தியில் இன்னும் தொடர் விவாதமாகவே இடம் பெற்று வருகின்றது.
இராணுவத்தின் மீது ஆயுதவழித் தாக்குதலாக முன்னெடுக்கப்பட்ட கெரில்லா உத்திமுறை போர் நேர்நின்று போர்புரியும் மரபுமுறை இராணுவப் போராக மாற்றமடைந்த போது அதிலும் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர்.
ஒரு நாட்டில் வாழும் இனம்,அதே நாட்டில் தன்னுரிமைக்குப் போராடுவதற்காக ஆயதத்தை எடுக்கும் போது தன்னை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தன்னால் கொடுக்கப்படும் அழிவுகளின் காரணத்தால் அந்த அழிவக்கு உற்படும் இனத்தின் கோபத்திற்கு ஆளாகின்றனர் என்பதை மறுக்க முடியாது,இது மனித இயல்பாகும்.
தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பதற்கப்பால் இன்றுவரை தமிழர்களும் சிங்களவர்களும் சமநிலைக்கு வரமுடியாத காரணிகளில் ஒன்று தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற அடையாளத்திற்குட்பட்டவர்களாக இருப்பதுமாகும்.
இலங்கையில் சிங்களவர்களைவிட தமிழர்கள் மூத்த குடிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்,அப்படியெனில் தொடர்ந்தும் தமிழர்கள் சிறுபான்மையினமாக இருப்பதற்கான காரணிகள் எவை என இதுவரையில் எந்தவொரு ஆய்வாளர்களும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை.
இலங்கையின் சுதேசிய குடிகள் யார் என்பதை நான் படித்த காலத்திலிருந்த சரித்திரப் புத்தகத்தை சாட்சியமாக்கி முன் வைப்பதென்றால் இயக்கர் நாகர் வேடர் என்றுதான் அதில் சொல்லப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரை சிங்கள மக்களுக்குச் சார்பானதோ,தமிழர்களுக்குச் சார்பானதோ அல்ல.இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய இனக் குழப்பங்களை எனது பார்வையில் பதவிடுகிறேன்.
இதை வாசிப்பவர்களுக்கு இது குழப்பமான கட்டுரையென்று அவர்கள் கருதலாம் அல்லது கோபத்தையும் ஏற்படுத்தலாம்.புத்தளத்திலிரு;து தெற்கு நோக்கிய இலங்கைக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் அடுத்தடுத்த சந்ததிகள் சிங்களவர்களாக மாறிவருவதும் உண்மையே.
அது போல இலங்கை மீதான சோழர் படையெடுப்பின் போது அதனை எதிர்த்த கணிசமான தொகையினரான கொவிகம பிரிவினரைக் கைது செய்த சோழப் படைகள் வடக்கில் குடியமர்த்தி அவர்கள் தமிழராக மாறி கொஞ்சம்
வித்தியாசத்துடன் பல ஊர்களில் குழுக்கள் குழுக்களாக வாழ்வதும் உண்மையே.(காங்கேசன்துறை தையிட்டி விகாரை அதன் அடையாளம்)
சிங்களவர்களும் சரி தமிழர்களும் சரி வெளிப்படையாக உண்மைகளைப் பேசத் தயங்குகிறார்கள்.
தமிழர்கள் மீது சிங்களவர்கள் முரண்பட்டு நிற்பதற்கு அவர்கள் பல காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் இலங்கை அரசில் தமிழர்களே உயர்பீடங்களிலும்,அரச அதிகாரிகளாகவும் திணைக்களங்களிலும் அதிகாரிகளாகவும் பல தசாப்பதங்களாக இருந்து வந்தமையை பெருபான்மை இனத்தவரான சிங்கள மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அந்த மனநிலைக்கு எண்ணை ஊற்றியது போல இலங்கையில் வணிகத்தைத் தம்கையில் வைத்திருந்த தமிழகச் செட்டிமார்களும்,மலையாளிகளும் சிங்கள இனவாதிகளைத் தூண்டிவிட்டதனால் ஏற்பட்டதே இனக் கலவரங்களாகும்.
இவ்வினங்கலவரங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர்களான தமிழ்ச் செட்டிமார்களையோ,மலையாளிகளையோ இலங்கைத் தமிழர்களோ,தமிழ் வணிகர்களோ சந்தேகம் கொள்ளவில்லை.
காரணம்,இந்தியக் குடிமகன்கள் எமக்கெதிராகச் சூழ்ச்சி செய்ய மாட்டார்கள்,தமிழ்ச் செட்டிமார்கள் தூண்டியிருக்கமாட்டார்கள் என்றும்,யாழ் குடநாட்டுத் தமிழர்களோடும்,பரவலாகவும் ஓடுகள்,புகையிலை,வடக்கன் மாடுகள்,அத்துடன் இலங்கை முழுவதற்குமான,கள்ளக்கடத்தலுக்கூடாக கஞ்சா வியாபாரம் போன்றவற்றை மலையாளிகளும் செய்து வந்த போதும் அவர்கள் ஒரு போதும் எமக்கெதிராக ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப் போடமாட்டார்கள்; என்னவிருந்தாலும் இந்தியா நமது அயல்நாடு என இலங்கைத் தமிழர்கள் அதீதமாக நம்பினார்கள்,ஏமாந்தார்கள்.இன்றுகூட இலங்கைக் கடலுக்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எதிர்த்துக் குரல்கொடுப்பவர்களாக இருப்பவர்கள் வடக்கு மீனவர்களேயன்றி ,தமிழரசியல்வாதிகள் எவருமேயல்ல.இவர்கள் தாம் இலங்கையர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.தமிழரசியல்வாதிகள் தாம் இந்தியக் குடிமகன்கள் என நினைக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
அது போல கப்பல்கள் வழியான ஏற்றுமதி இறக்குமதிகளின் ஏகபோக உரிமையாளர்களாக இருந்தவர்கள் தமிழகச் செட்டிமார்கள்.இவர்களுக்கு இலங்கை அரசில் அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை செல்வாக்கு இருந்தது.
பணம் பொருள் என அவர்களுக்கு அன்பளிப்பு என்ற பெயரிலும்,இலஞ்சம் என்று கூறமுடியாதவாறு மகிழ்ச்சியான பண அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
மெல்ல மெல்ல இலங்கைத் சுதேசிய மக்களின் கைகளில் வணிகம் கைமாறிய போது ஏற்பட்டதே இனக்கலவரமாகும்.
இக்கட்டுரையின் ஆரம்பம் எதை நோக்கியதாக இருந்ததோ அதை நோக்கி எழுதப்படுகையில் தமிழ்ச் சிங்கள பகை,முரண்பாடுகளின் அடிப்வபடை என்னவென்பதற்கூடாகவும் பயணப்பட வேண்டியுள்ளது.
(தொடரும்)
![]()