இந்தியா
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய கனிமொழி

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை திமுக எம்பி கனிமொழி மறைமுகமாக சாடி பேசியுள்ளார்.
திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடி பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “நிர்வாகம் பற்றிய எந்தவொரு அரசியல் அடிப்படை தெளிவும் இல்லாத சிலர் ஆட்சி அமைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு திசை திருப்பி பேசுவர்களிடம் மக்கள் எடுத்துக் கூற வேண்டும்” என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடி பேசியுள்ளார்.
![]()