தேர்தல் பிரசாரத்துக்கு சென்று வீடு புகுந்த வேட்பாளர் யுவதி மீது துஷ்பிரயோகம்

இந்த ஆண்டு உள்ளூராட்சித் சபை தேர்தலில் சர்வஜன பலய கட்சியிலிருந்து லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பத்தொன்பது வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லக்கல பொலிஸ் பிரிவின் ஹத்தொட்ட அமுன பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சந்தேக நபர் கடந்த 3 ஆம் திகதி சென்றதாகவும், உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதால், தனக்கு ஆதரவளிக்குமாறு முதலில் அந்த யுவதியை கேட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தனக்கு ஆதரவளித்தால் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு மாத்தளை பகுதியில் வேலை வாங்கித் தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்த பிறகு, சந்தேக நபரான அந்த வேட்பாளர் வீட்டினுள் புகுந்து வலுக்கட்டாயமாக தன்னை அருகில் இழுத்து பாலியல் துஷ் பியோகத்திற்குட்படுத்தியதாக அந்த இளம் யுவதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
48 வயதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் லக்கல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()