பொங்கல் சீர்…. கதை… யாழ் எஸ் ராகவன்


பெருநகரத்தின் பூதாகரமாக வளர்ச்சியில் வானைத்தொடும் அடுக்ககங்கள் ஒருவித பயத்தையும் பதற்றத்தையும் உண்டாக்குகின்றன.
காலம் மாற்றம் கட்டிடங்களிலும் தெரிகிறது விரைந்து ஓடும் வாழ்வில் பாசம் காட்டுவதற்கோ பிரியங்களை பரிமாறுவதற்கோ நேரமும் பொழுதும் யாருக்கும் வாய்ப்பதில்லை நேற்று இரவு பேருந்து மதுரையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டது.
அன்சாரி அம்மா கொடுத்த முகவரியை வைத்துக்கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்று குளித்து சாப்பிட்டு அங்கே செல்லலாமா அக்கா கோவித்து கொள்வார். நேரடியாகவே அங்கு சென்று விடலாமா என்று யோசித்து கீழே இறங்கினான். இருந்தாலும் காலையில் எப்படி அவர்களை சென்று பார்ப்பது சொந்தக்கார “சச்சா,” வீட்டுக்கு சென்று குளித்து ஆடைகளை மாற்றி பிறகு அக்கா வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தான் அன்சாரி.
அன்சாரிக்கு எப்பயும் தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜிப்பாவும் ஜீன்ஸ் வேண்டும். தோற்றத்தில் எவரையும் பயமுறுத்தும் தோற்றம் அருகில் சென்று பழகினால் அவனைப் போல இனியவர் யாருமில்லை. எப்பொழுதும் ஒளி மிகுந்த ஞானம் தரும் கண்கள். எல்லோருக்கும் உதவும் மனம் படித்து நல்ல வேலையில் இருக்கும் பெற்றோருக்கு கீழ் படிந்த ஒழுக்கத்தில் உயர்ந்தவன் அன்சாரி தோற்றத்திற்கும் பழகும் தன்மைக்கும்உள்ள வேறுபாடுகள் இங்கே பலருக்கு புரிவதில்லை எந்த விதமான தீய பழக்கங்களும் ஹராம் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன். அடுத்தவரை சொல்லாலும் செயலாலும் மனதாலும் காயப்படுத்தக் கூடாது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டவன் அன்சாரி
தன் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு பிறருக்கு உதவ வேண்டுமென்று மறைநூல் சொல்வதை தட்டாமல் செய்து வருபவன் அன்சாரி.
உறவினர் சச்சா வீட்டில் ஆட்டோ வந்து இறங்கியதும் அவர்கள் அன்போடு இவனை வரவேற்றார்கள் வழக்கமான காலை கடனை முடித்துவிட்டு அவன் கொண்டு வந்திருக்கும் முகவரியைக் காட்டி இந்த முகவரிக்கு எப்படி ச்செல்ல வேண்டும் என்று சச்சா விடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
இன்னும் நீங்கள் அந்தப் பழக்கத்தை விடவில்லையா இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இந்த பழக்கமெல்லாம் என்று சச்சா குறைபட்டுக் கொண்டார்.என்ன அப்படி சொல்லி விட்டீர்கள் இந்த சம்பிரதாயம் அல்ல எங்களுக்கு முக்கியம் இதை சாக்கு வைத்து ஆண்டுக்கு ஒரு முறை ஜெயஸ்ரீ அக்காவை பார்ப்பதுதான் எங்கள் நோக்கம் நானும் தம்பி நௌசாத்தும் சேர்ந்து வருவோம் இந்த முறை அவனுக்கு வேலை வந்து விட்டது அதனால் அவன் வர இயலவில்லை.
உடம்பில் உயிர் மூச்சு உள்ளவரை இதை நாங்கள் விடக்கூடாது என்று அம்மா சொல்லி இருக்கிறாள். எங்களால் எப்படி அவள் வார்த்தையை மீற முடியும் தவிரவும் குழந்தை பருவத்தில் எப்படி எல்லாம் எங்களை தாலாட்டி சீராட்டி வளர்த்திருப்பாள் உயர் பந்தம் அதை மறக்க முடியாது என்றான் அன்சாரி.
ஆட்டோவில் ஏறி அமரும் பொழுது அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன மதுரையில் கோ புதூர் அருகில் ஒரு காம்பவுண்ட் வீட்டில் ஜெகநாதன் குடும்பமும் இவர்கள் வீட்டின் அருகே இப்படி வந்தார்கள்.
மகாலட்சுமி அம்மாள் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் ஜெயஸ்ரீ இளையவள் விஜய் ஸ்ரீ அருகில் இருப்பதோ எங்கள் வீடு எங்கள் அம்மா பாத்திமா பீவீயும் மகாலட்சுமி அம்மாளும் தோழிகளாகி விட்டார்கள். நாங்கள் இரண்டு ஆண் குழந்தை அவர்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை.

என் அம்மாவிற்கு பெண் குழந்தை என்றால் அவ்வளவு இஷ்டம் எப்பொழுதும் ஜெயஸ்ரீ எங்கள் வீட்டில் தான் வளர்ந்தாள் அவளுக்கு பின்னி விடுவது தலைவாரி விடுவது அம்மா விரும்பி செய்வார் எவ்வளவு வேலை இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு மாமி தலை வாருங்கள் என்று அவள் சீப்போடு வரும் தங்கம் இதோ வந்துட்டேன் தங்கம் என்று கூறி தான் பெற்ற பிள்ளை போல ஜெயஸ்ரீக்கு தலைவாரி விடுவாள் அம்மா.
ஒவ்வொரு முறையும் நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பொழுது விஜயஸ்ரீ அக்காவையும் கை பிடித்துக் கொண்டுதான் செல்வோம். மாலை நேரத்தில் அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். என் விரல் பிடித்து ஜெயசீரி அக்கா கடினமான படங்களை எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அவர்கள் வீட்டு தின்பண்டங்களை எல்லாம் தருவார்கள்.
அம்மா சொல்வாள் உனக்கு இரண்டு அக்கா எப்பொழுதும் அவர்களுக்கு நீ தம்பியாக இருக்க வேண்டும். எங்கள் தந்தைகள் இருவரும் உறவோடு இருந்தார்களா எங்களுக்கு தெரியவில்லை ஆனால் எங்கள் அன்னைகள் இருவரும் உடன் பிறந்த சகோதரராகவே இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளி பேருந்து ஏறுவதற்கு முன்பு அக்காவை அழைத்துக் கொண்டுதான் செல்வேன்.
பேனா கானாமல் போய்விட்டது ஸ்கேல் உடைந்து விட்டது வீட்டில் சொன்னால் திட்டுவார்கள். என் முக வாட்டத்தை பார்த்து என்னடா அன்சாரி ஏன்டா ஒரு மாதிரி இருக்கே.
நான் விஷயத்தை சொன்னதும் புது பேனா புது ஸ்கேல் வாங்கித் தருவாள்.
அவள் பெரிய மனுஷியான போது கூட வீட்டில் பெரிய விழா ஒன்று நடத்தினார்கள்
எங்க அம்மா அவள் பக்கத்தில் போக கூடாது என்று சொன்னார்கள் நான் அப்ப டவுசர் போட்டு இருந்த காலம்.
வேகமாக ஓடி வந்து என் கையைப் பிடித்து இழுத்து அவனுக்கு என்ன குழந்தைக்கு அவன்என் தம்பி யார் சொன்னாலும் சரி அவனை கூட்டிட்டு தான் பள்ளிக்கூடத்துக்கு போவேன் என்றாள் ஜெயஸ்ரீ அக்கா ஜெயஸ்ரீ அக்கா வீட்டில் அவங்க அப்பா அம்மா ஊருக்கு போனபோது நாங்கள் தான் காவலுக்கு இருப்போம் எங்களை நம்பித்தான் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள். தெருவில் போகும்போது வரும்போது வரும்போது பாதுகாப்பாக நானும் தம்பியும் உடன் செல்வது வழக்கம்.
திருமணம் முடித்த மாமாவும் எங்களை புரிந்து கொண்டிருக்கிறார் பலமுறை அவர்கள் வீட்டு விசேஷத்தில் நாங்கள் தான் முதல் ஆட்களாக இருப்போம் எங்கள் வீட்டு விசேஷத்திலும் அக்கா இல்லாமல் இருந்தது இல்லை இது பலருக்கு புரிவதில்லை அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஆட்டோ அந்த அடுக்ககத்தின் வாசலில் இறங்கியது புதிதாக உள்ள அப்பார்ட்மெண்டில் உள்ள வாட்ச்மேன் அன்சாரியை மேலும் கீழும் பார்த்து எந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று கேட்டான்.
அங்கே மொத்தம் 15 மாடி வீடுகள் ஒவ்வொரு மாடிலும் 53 அடுக்குகள் தலை சுற்றுவது போல இருக்கும் எந்த வீட்டுக்கு யார் விருந்தாளி வந்தாலும் அவர்கள் முகவரியைக் கொடுத்து வாட்ச்மேன் அவர்களுக்கு இண்டர் கேமில் அழைப்பார் அவர்கள் போன் எடுத்து யார் என்ன விசாரித்து சிசி கேமராவில் பார்த்து பின்னர்தான் தன் வீட்டுக்கு வரச் சொல்வார்கள்.
ஆனால் அன்சாரி என்பவர் ஜெயஸ்ரீ என்பவரை பார்க்க வேண்டும் என்று சொன்ன பொழுது வாட்ச்மேனுக்குபுரியவில்லை இதில் ஏதோ இருக்கிறது போன் செய்யக்கூட மறுத்துவிட்டார். பின்னர் அவர் என் அக்கா நாங்கள் ஒன்றாக குடியிருந்தோம் எங்களுக்கும் அவருக்கும் உள்ள பந்தம் இரண்டு தலைமுறை தாண்டியது அவர் போன் நாட் ரீச்சபிள் உள்ளது.
நீங்கள் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளுங்கள் என்று அன்சாரி சற்று நிதானமாகத்தான் பதில் சொன்னான்.
இருந்து போதும் வாட்ச்மனுக்கு தயக்கம் ஜெயஸ்ரீ பெரிய அதிகாரியின் மனைவி அவர் கோபப்படுவாரோ அதனால் தன் வேலைக்கு எதுவும் ஆபத்தாக ஆகிவிடும் அந்த அடுக்ககத்திற்கு அவர் தான் செகரட்டரி என்று மிகவும் யோசித்தான்.
சற்று அரை மணி நேரம் மேல் ஆகிவிட்டது நீங்கள் அவர் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் அது நாட் ரீச்சபிள் இருக்கிறது அவர்கள் புதிதாக இந்த அப்பார்ட்மெண்ட் வந்திருக்கிறார்கள் நான் மதுரையில் இருந்து வருகிறேன் ஆண்டுதோறும் இங்கே வருவது வணக்கம் என்று மிகவும் பொறுமையான குரலில் அவன் சொன்னான்.
சரி எதற்கும் சொல்லுவோம் என்ற அரை மனநிலையோடு திருப்தி இல்லாமல் வாட்ச்மேன் ஜெயஸ்ரீக்கு தொடர்பு கொண்டான். அம்மா யாரோ அன்சாரியாம் மதுரைல இருந்து வந்திருக்காங்க பாய் மாதிரி தெரியுது என்ன அம்மா அனுப்பட்டுமா.
மறுமுனையில் ஜெயஸ்ரீ துள்ளி குதித்தார் ஐயா அவ என் தம்பி இவ்வளவு நேரம் நீங்க நிக்க வச்சது தப்பு உடனே அனுப்புங்கள் இல்ல நான் கூட வரவா என்று சொல்லி டக்கென்று ஃபோனை வைத்துவிட்டு லிப்டில் இருந்து கீழே இறங்கி வாசலுக்கு ஓடி வந்தாள் ஜெயஸ்ரீ

டேய் அன்சாரி ஏன்டா ஒரு போன் பண்ணி இருக்க வேண்டாமா இவ்வளவு நேரமா நீ இங்கே நிப்ப அக்கா டவர் சரியா கிடைக்கல வாடா வாடா எத்தனை நாளாச்சு உன்னை பார்த்து எப்படி இருக்க அம்மா பிள்ளைகள் மனைவி என்ன நல்லா இருக்காங்க லா என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளைப் பிடித்து பையை வாங்கிக் கொண்டு நடந்தால் ஜெயஸ்ரீ
வாட்ச்மனுக்கு ஒரே குழப்பம் எப்படி ஒரு ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவரும் அன்சாரியும் ஒன்றாக நடந்து செல்கிறார்களே . மேலே மாமா முகுந்தன் அன்சாரியை கட்டித்தழுவி வரவேற்றார்.
அவன் கொண்டு வந்திருந்த பொங்கல் சீரை ஒரு தட்டில் வைத்து கொடுத்தான்
சரி சரி எப்போ ஊரிலிருந்து வந்த அக்கா நைட் புறப்பட்டு காலையிலேயே வந்துட்டேன் எங்க சச்சாவா பார்க்க வேண்டி இருந்துச்சு அவர பாத்துட்டு அப்படி இங்க வந்தேன்.
ஏன் காலையில இங்க வந்து இருந்துட்டு சாயந்திரமா அவர போய் பார்க்க கூடாதா
அப்படி இல்ல காலைல நீங்க அவசரமா கிளம்பிட்டு இருப்பீங்க அதனாலதான்
சரி சரி வா சாப்பிடலாம் .
அவள் எப்பொழுதும் செய்யும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அப்பளமும் வெண்டைக்காய் பொரியலும் சற்று மனம் கூடியிருந்தது மனதை போலவே உணவை விட உறவும் உபசரிப்போம் உயர்ந்திருந்தது அம்மா எப்படி இருக்காங்க அப்பாநம்மள விட்டு போயிட்டாரு அந்த காலங்கள் மனதில் மறையாமல் இன்னும் இருக்கிறது.
எப்படி அக்கா மறக்க முடியும் நான் உங்க கைய புடிச்சுகிட்டு பள்ளிக்கூடத்துக்கு போனது நீங்க சொல்லிக் கொடுத்தது மறக்க முடியுமா அக்கா ஏங்க என் தம்பிய பாத்தீங்களா எவ்வளவு பாசமா இருக்கா என்ன பாக்க ஓடி வந்துட்டானே இவ்வளவு பெரிய ஊர்ல எனக்கு ஒரு தம்பி இல்ல ரெண்டு தம்பி என்று ஆனந்த கண்ணீரில் நனைந்தால் ஜெயஸ்ரீ
பாத்திமா பீவி பெற்ற தங்கப்பிள்ளைகள் ஒரே ஒருமுறை அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
ஒரு சிறு உதவி செய்ததற்காக வாழ்நாள் முழுவதும் எனக்கு சீர் வைக்க வேண்டும் என்று சொன்ன அந்த பெண்மணி எனக்கு இன்னொரு தாய் அவருக்கு பெண் பிள்ளை இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது என்று சொல்வார். பெண்ணாய் பிறந்த பொழுது எல்லோரும் பெண் குழந்தையாக பெண் குழந்தையா என்று வேதனையை உணர்ந்த காலத்தில் என் தங்கப்பிள்ளை என்று என்னை சுமந்து தலைவாரிப் பூச்சூடி அழகு வார்த்தை சொல்லி என் திருமணத்தையும் பிள்ளை பேரையும் உடனிருந்து கவனித்த அந்த மாபெரும் பெண்மணியே என்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை.
அக்கா ரொம்ப டச்சிங்கா பேசிட்டே இருக்காதீங்க பசிக்குது இதெல்லாம் நீங்க சொல்லனுமா நம்மைப் போலவே அடுத்த தலைமுறையும் இருக்க வேண்டும் அக்கா என் பிள்ளைகள் சென்னையில் தான் படிக்க வைக்க போகிறேன் அனுப்பி விடு தம்பி நான் பாத்துக்கிறேன். பொங்கல் சீர்கடைமையை முடித்துவிட்டு புறப்பட்டான் அன்சாரி.
![]()