இலங்கை

இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் மோதல் வெடித்தால் இலங்கையும் சிக்கும்!

இந்தியாவுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள அண்மைய ஒப்பந்தங்கள் காரணமாக இந்தியா – பாகிஸ்தானுக்கிடையிலான சாத்தியமான மோதல்களில் இலங்கையும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக மஹரகம நகரசபைக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு சங்க அமைப்புக்கு நன்கொடையோ அல்லது சங்கத்தினருக்கு ஒரு அன்னதானம் கூட வழங்காத நிலையில், ஸ்ரீ தலதா மாளிகையில் அனுபவமற்ற குழுவால் மேற்கொள்ளப்படும் தந்த தாது நினைவுச் சின்ன கண்காட்சி நிகழ்வால் மக்கள் துயரங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் குறுகிய பார்வை கொண்ட செயல்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அவர்களின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ், பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிறுத்துவதன் மூலம் யாத்ரீகர்கள் கூட தடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் கர்தினால் கோரியபடி உயர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கத் தவறிவிட்டது. ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் எம்.பி.யின் தொடர்பு தொடர்பான தகவல்களை அமெரிக்க எப்.பி.ஐ அறிக்கை, வெளிப்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது என்றும் ஆனால் நாட்டின் பாதுகாப்புச் செயலாளருக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தியாவுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையெழுத்திட்ட மோசடி ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சாத்தியமான மோதலில் இலங்கை தானாகவே தலையிடும் அபாயம் உள்ளது. இது நாட்டை ஜிஹாதி குழுக்களின் இலக்காக மாற்றக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்திய ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *