இந்தியா
எடப்பாடி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாயுடன் தீவிர சோதனை

இந்தியாவின் சென்னை கிரீன்வேஸ் வீதியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காணமாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மோப்பநாய் உதவியுடன் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.
மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், அவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதனால் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![]()