கதைகள்

“எஸ் எஸ் மேன்சன்”… சிறுகதை… யாழ் எஸ் ராகவன்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு போகும் அந்த ஆர்ச் பக்கத்தில் ஒரு சந்தில் கோஜா ஹாஸ்பிடல் எதிர்ப்புறம் அமைந்துள்ளது சோமசுந்தரம் மேன்சன் எல்லோரும் சுருக்கமாக எஸ் எஸ் மேன்சன் என்பார்கள்.

பெருநகர காங்கிரீட் காடுகளில் வசிக்கும் இயந்திர பொம்மைகளைப் போல ஓடியும் உருகியும் வாழும் வாழ்க்கை உப்பு சப்பு இல்லாதது. எண்ணற்ற மென்சன்கள் அந்த பகுதி முழுவதும் இருக்கும். எஸ் எஸ் மேன்ஷன் நவீனமாகவும் அழகாகவும் இருக்கும் அங்கே இடம்கிடைப்பது அரிது சோமசுந்தரம் செட்டியார் அந்த காலத்தில் கட்டி போட்ட மாளிகை பிற்காலத்தில் அவர் பிள்ளைகள் அதை பராமரித்து வைத்திருக்கிறார்கள்.

மொத்தம் நான்கு மாடி ஒரு மாடிக்கு இரண்டு வீடு என மொத்தம் எட்டு வீடுகள் புறா கூட்டை விடஅளவில் பெரிய அளவில் உள்ள மூன்றாவது மாடியில் இருக்கும் வீட்டில் தான் நாங்கள் ஐந்து பேர் தங்கினோம். நான்கு பேர் தான் ஒரு அறையில் தங்கலாம்.ஏதோ தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது போல நடித்து வருகிறோம்.

சோமசுந்தரம் செட்டியார் மகன் சங்கரபாண்டி செட்டியார் கரராக வாடகை வசூல் செய்வதில் வித்தகர். குடிக்க கூடாது, புகைக்கக் கூடாது வேற யாரையும் அடைத்து விடக்கூடாது.
இத்தனை மணி வரை தான் துணி துவைக்க வேண்டும். இத்தனை மணிவரை தான் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் இரவு 10 மணிக்குள் வீட்டுக்குள் வந்து விட வேண்டும் என்றெல்லாம் ஆயிரம் கண்டிஷன்பல நேரங்களில் அதை நாங்கள் மீறுவது பழக்கம்.மீறும் போதெல்லாம் அவர் சீறுவது வழக்கம்.

இந்த தெருவில் தான் அரை டவுசர் போட்டுக் கொண்டு சாலையோர கடைகளில் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டு டீக்கடையில் ,பங்கடையில் கடன் வைத்துக்கொண்டு ,வேலைக்காகவும் வாய்ப்புக்காகவும் அலையும் இளைஞர் கூட்டம் எல்லா விரக்திகளையும் உள்ளடக்கி கொண்டு ஏதோ ஒரு துரிததகதையில் ஓடிக் கொண்டிருக்கும்.

எங்கள் மேன்ஷனில் நாங்கள் ஐந்து பேர் வெவ்வேறு மாவட்டத்தை சார்ந்தவர்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்றது நினைவில் இல்லை. ஒருவர் திருத்துறைப்பூண்டிக்காரர் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர் தன் மாமாவிடம் ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்.

இன்னொருவர் சேலத்துக்காரர் இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக இருக்கிறார் இன்னொருவர் தேனி மாவட்டத்திற்காக எப்படியாவது பாரதிராஜா போல திரைப்படம் இயக்குனராக வேண்டும் என்பது அவர் கனவு இன்னொருவர் நாகர்கோவில் காரர் எப்படியாவது எழுத்தாளர் சுஜாதாவை போல பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பது கனவு.

இன்னொருவன் திண்டிவனத்துக்காரன் அவன் எப்பயாவது அரசு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்மஎங்களுக்குள் எந்தவிதமான பூர்விக பந்தம் இல்லை ஆனால் இங்கு வந்த பின்பு நன்றாக பழகி விட்டோம் எல்லோரும் கிட்டத்தட்ட சம வயது உடையவர்கள்.
எங்கள் அறையில் ஆறாவதாக அவன் வந்தான் அவன் நாகர்கோவில் காரணனின் நண்பன். நாங்கள் எல்லாம் ஒரே மதம் அவன் மட்டும் வேறு மதம் அவன் பேரிலேயே அவன் மதம் வெளிப்படையாக தெரியும்.

முதலில் எங்களுக்குள் ஒரு தயக்கம் ஒரு மயக்கம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது ஏற்கனவே ஒருவர் அதிகம் இதில் இன்னொருவர் வேண்டுமா என்று யோசித்த பொழுது வேறு வழியில்லை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அவனை இங்கு இருப்பான் என்று அவர் சொன்னதால் நாங்கள் சரி செய்து கொண்டோம்.

ஆரம்பத்தில் அவனுடன் யாரும் சரியாக பேசுவதில்லை அவனைப் பார்த்தாலே ஒரு வெறுப்பு தான் வரும் ஆனாலும் என்ன செய்ய நாகர்கோவில்காரர் நிறைய உதவி எல்லோருக்கும் செய்வார் .

அவர்தான் ஒவ்வொரு மாதமும் சோப்பு, பேஸ்ட் மற்ற விஷயங்களை எல்லாத்தையும் கவனித்துக் கொள்பவர் அதனால் நாங்கள் பொறுத்துக் கொண்டோம்.

மெல்ல மெல்ல அவன் எங்களுக்குள் ஒருவனாக மாறத் தொடங்கினார் நாங்கள் எல்லோரும் சோம்பேறிகள் எங்கள் துணியை துவைப்பது மட்டும் தான் பெரிய வேலையாக நினைத்துக் கொண்டிருப்போம் இஸ்திரி செய்வது இல்லை அதை வெளியில் தான் கொடுப்போம்அதில் பெரிய தொகை ஆகும்.

முதல் முறையாக பேட்டரி சார்ஜரில் அயன் பாக்ஸ் ஒன்று வாங்கி வைத்து அழகாக அயன் செய்தான் அவன் துணிகளை மட்டுமல்ல எங்கள் துணிகளையும் அவன் சிறப்பாக அயன் செய்து கொடுத்தான். பெரும் தொகை எங்களுக்கு மிஞ்சியது அதன் பிறகு மெல்ல மெல்ல அவன் ஊரிலிருந்து சில பாத்திரங்களை கொண்டு வந்து சமையல் செய்யலாம் என்று ஐடியா கொடுத்தான்.

பொங்குறது பெண்கள் வேலை திங்கிறது மட்டும் தான் ஆண்கள் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்த ஆணாதிக்க மனம் படைத்த ஆண்கள் மத்தியில் திங்கிறதுக்கு பொங்கினா என்னபொங்குறதுல என்ன ஆண்கள் பெண்கள் எனக்கேட்டு எல்லோரையும் சின்ன சின்ன உதவிகள் செய்ய வைத்து எல்லோருக்கும் சமயலும் கற்றுக்கொடுத்தான்.

தாங்கள் தஞ்சை நாகர்கோவில் திண்டிவனம் சேலம் தேனி என்று எல்லா மாவட்டத்து உணவுகளையும் பரிச்சார்த்த முயற்சியில் செய்து பார்த்து நன்றாக சமைத்து வீட்டுச் சமையல் ருசியை உணர்ந்து கொண்டோம் அதிலும் பெருந்தொகை மிஞ்சியது. இப்படி அயன் செய்வது சமையல் செய்வது மட்டுமில்லாமல் முடிவெட்டவும் எங்களுக்கு பழகிக் கொடுத்தான்.
எங்கள் முடிகளை நாங்களே மாறி மாறி வெட்டி கொண்டோம் பெருநகரத்து வீதிகளில் இதற்கெல்லாம் அதிகம் செலவாகும் அவையெல்லாம் எங்களுக்கு நிச்சயம் மிச்சமானது. இப்படி வேண்டாத ஒருவனாக உள்ளே நுழைந்தவன் கைரேகை போல உடலோடு ஒட்டிய மச்சம் போல் ஒட்டிக்கொண்டான்.

தங்கள் மேன்ஷனில் அறையில் சாதாரணமாக பேசிக் கொள்ளும் பொழுது எவ்விதமான அரசியல் ,மதம் ,சாதி இவை எல்லாம் இங்கே இருக்க கூடாது நாம் பிழைக்க வந்திருக்கிறோம் பிழைப்பு தான் முக்கியம் என்று எங்களுக்குள் ஒரு அறம் இருந்தது.

ஆனாலும் புதிதாக வந்தவன் எல்லாவிதமான வேலைகளை எங்களுக்கு பழகி கொடுத்து அவனும் எல்லா வேலைகளும் செய்து பல்வேறு விதமான நிதி சுமைகளை குறைத்த போதும் அவன் மீது ஏனோ ஒட்டுதல் வந்த போதும் ஒருவெறுப்புஒன்று காரணம் இல்லாத ஒதுக்குதல் உள்ளுக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது.

சந்தேகமும் பயமும் மனிதனை பிடித்துள்ள சாத்தான் சந்தேகம்தான் பயத்தை உண்டாக்குகிறது பயம் தான் வெறுப்பை உண்டாக்குகிறது இந்த சந்தேகமும் பயமும் இல்லை என்று சொன்னால் மனிதன் ஜீவிதத்தில் குறைகளே இல்லாமல் போய்விடும். தன்னை நிரூபிக்க தன்னை இணைக்க எவ்வளவு வேலைகள் ஒருவன் செய்ய வேண்டி இருக்கிறது என்று யோசிப்பது உண்டு.ஆனாலும் தண்ணீர் எல்லா இடங்களிலும் தன்னை நிரப்பி கொள்கிறது.

எங்களின் தஞ்சாவூர் காரன் மட்டும் மிகவும் அழுத்தமானவன் இவனைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருப்பான் இவனுடைய இருத்தல் அவனுக்கு பிடிக்கவில்லை இவனை சந்தேகக் கண் கொண்டு ஏதாவது ஒரு இட்டுக்கட்டி இவன் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருப்பான்.

ஒரு முறை தஞ்சாவூர் காரன் ஒரு விபத்தில் அடிபட்டு விட்டான் எங்கள் மேன்சனுக்கு தகவல் வந்தது நாங்கள் எல்லோரும் ஓடி போய் அவனை பார்த்து ஆறுதல் சொன்னோம் எங்களிடம் உள்ள காசுகளை திரட்டிய பொழுது மிக குறைவாக இருந்தது இப்போதுதான் அவனிடம் இருந்த பெருந்தொகையை எடுத்து தஞ்சாவூர் காரணுக்குக் கொடுத்தான்.

அது மாத்திரம் அல்ல இது ரத்தமும் ஒரு யூனிட் ரத்தம் தேவைப்பட்ட பொழுது சற்று யோசிக்காமல் ரத்தம் கொடுக்க ஆயத்தமானான். நாங்கள் எல்லோரும் குடித்திருந்தால் ரத்தம் கொடுக்க முயற்சி செய்யவில்லை.

எப்போதும் குடிப்பழக்கம் இல்லாதவன் அவன் உடனே ரத்தம் கொடுத்து தஞ்சாவூர் காரணின் உயிரைக் காப்பாற்றினான். இது முதல் எங்கள் உயிரில் ஒருவன் ஆனான் அவன்.
எவ்வளவு நல்ல விஷயங்களை எங்களுக்கு கற்பித்தான் சொல்லில் அடங்காத பேரன்பும் பிரியங்களும் மேன்சன் தந்தது.

எங்கள் மேன்ஷன் அருகே ஒரு பெரிய கொலை குற்றம் நடந்து விட்டது காவல்துறையை எல்லோரையும் விசாரித்தது . மற்றவர்களை லேசாக விசாரித்து விட்டு அவனை மட்டும் கடுமையாக நடத்தியது.

அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தான் விசாரிக்க வேண்டும் உடனே வா என்று விரட்டியது அப்போது நாங்கள் முடியாது.நாங்கள் ஐந்து பேரும் உடன் வருவோம் என்றோம் .

அவனை அழைத்துச்செல்வீர்கள்என்றால் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் ஒருவன் பெயரை வைத்து நீங்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்துவிடலாம் அவன் எவ்வளவு நல்லவன் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கர்ஜித்தோம்.

அதில் தஞ்சாவூர் காரன் தான் முன்னணியில் நின்றான் பெரிய அரசியல்பின்னணி உள்ளவன் தஞ்சாவூர் காரன் அவன் மாமாவின் பெயரை சொன்னவுடன் காவல்துறை பயந்து விட்டு சென்று விட்டனர் .

நீ எதற்கு அந்த மதத்துக்காரனுக்கு சப்போர்ட் செய்கிறாய் என்று காவல் அதிகாரி கேட்ட பொழுது எனக்கு ரத்தம் கொடுத்த என் உடன்பிறவா சகோதரன் அவனைப்போல நல்லவன் யாருமில்லை பெயரைவைத்துக் கொண்டு உருவத்தை வைத்துக் கொண்டு யாரையும் தவறாக எடை போடும் எண்ணத்தை இனியாவது மாற்றி விடுங்கள் என்று சொல்லி நாங்கள் அவர்களை அனுப்பி வைத்தோம்.

எப்பொழுதும் துடிப்புடன் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் அவன் அந்த காவல் விசாரணைக்கு பிறகு நிலை குலைந்து போனான். செய்யாத தப்பிற்கு பேரை மட்டும் வைத்துக்கொண்டு எங்களுக்கு ஏன் களங்கத்தை விளைவிக்கிறார்கள் என்பதை மட்டும் அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அந்த மேன்ஷன் தான் எங்களுக்கு தாய் வீடு நல்ல உறவை நட்பை அன்பை போதித்தது அந்த மேன்ஷன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் நாங்கள் பல திசைகளில் பயணித்த பொழுதும் இந்த மேன்ஷன் தந்த உறவு மறக்கவே முடியாது.

ஆண்டுக்கு ஒரு முறை அனைவரும் இந்த மேன்சலில் கூடுவோம் எங்கள் சுக துக்கங்களை ப்பகிர்ந்து கொள்வோம். சமதர்மத்தை சமத்துவத்தை போதித்தது மேன்ஷன் எங்களைப் பொருத்தவரை போதிமரம்.

எம்மைப் போல இந்த பெருநகரத்திற்கு வந்து இறங்கும் எத்தனையோ இயந்திர பொம்மைகளுக்கு ஆறுதலாய் உந்து சக்தியாக இருக்கும் மேன்ஷன் வாழ்க்கை.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *