இலங்கை

17 ஆம் திகதி ரணிலிடம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதிர்ச்சியடைவதற்கு முன்னர் அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்குகளை திரும்பப் பெற்றதன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறி, சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக, ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களை ரணில் விக்ரமசிங்க அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான சம்பவத்தில் அவர் எப்போதாவது தலையிட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த உண்மைகளை சரிபார்க்க, தொடர்புடைய ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *