இலங்கை

வடக்கு மக்களுடன் அநுர விளையாடக் கூடாது; நாமல் எச்சரிக்கை 

தேர்தல் வாக்குகளை இலக்குவைத்து கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் கவனத்தில் கொள்ளாமல் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மோசமான அரசியல் விளையாடுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடும் கட்டுப்பாடுகளுடன் யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியைத் திறக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை உண்மையிலேயே கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக வீதி மூடப்பட்டிருந்தாலும், எந்தவொரு பாதுகாப்பு சரிபார்ப்பையும் பெறாமல் அரசாங்கம் அதை மீண்டும் திறந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அனைத்து அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலுக்கு முன்பு வாக்குகளைப் பெறுவதற்கான மற்றொரு நடவடிக்கையாக இது தெரிகிறது. மேற்பரப்பில் விடயங்களைச் செய்வதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் வாக்குகளை வெல்வதை மட்டுமே நினைப்பதை விட நாட்டின் பாதுகாப்பை முதலில் வைக்குமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீதி திறக்கப்பட வேண்டுமானால், அது முழுமையான பாதுகாப்பு சரிபார்ப்புகளுக்குப் பிறகு செய்யப்பட வேண்டும். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு அனைத்து தடைகளும் இல்லாமல் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *