இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிக்கு நிதியை விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க நிதி விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுவதாக யாழ். நீதவான் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானம் ஒன்றில் மின் தகன மேடை அமைப்பதற்காக குழி தோண்டிய போது மனித என்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , அப்பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதற்கான நிதி விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுவதால் , அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குறித்த வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *