இலங்கை
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சாவகச்சேரித் தொகுதி வேட்பாளர் அறிமுகம்

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சாவகச்சேரித் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு சாவகச்சேரி டச் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ள சாவகச்சேரித் தொகுதி வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
![]()