இலங்கை

இறுதி கட்டத்தை எட்டியுள்ள தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார

மேலும், உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்புகள் மற்றும் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அச்சகத்திற்கு இப்போது தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த நாளில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான 6 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான ஒரு முறைப்பாடும் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *