தாய்லாந்து , மியான்மாரில் பயங்கர நிலநடுக்கம்; ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமென அச்சம்

தென்கிழக்காசியாவில் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் மியான்மாரில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட மிகப்பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, அணைக்கட்டுகள் இடிந்து விழும் என்ற அச்சம் எழுந்தது, இதனால் பேரழிவு தரும் வெள்ளம் ஏற்படலாம்.
மேலும் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 10,000 முதல் 100,000 வரை இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
மேற்பரப்பிலிருந்து 6.2 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது, பின்னர் 12 நிமிடங்களுக்குப் பிறகு 6.4 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் அந்தப் பகுதியை உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்மற்றும் ஜேர் ர்மனியின் ஜி எவ்ச ற் புவி விஞ்ஞான நிலையம் ஆகியவை தெரிவித்துள்ளன
நிலநடுக்கத்தின் வலிமையால், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்தது, குறைந்தது பத்து வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மியான்மரின் தலைநகர் நேபிடாவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் அதிகாரிகள் அதை ‘பெரும் உயிரிழப்பு பகுதி’ என்று அறிவித்துள்ளனர், பாரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது
.இருநாடுகளிலும் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டபயங்கரமான நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப் பதுடன் .உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன
தாய்லாந்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக தாய் அவசரகால மீட்புப் படை தெரிவித்துள்ளது.
தலைநகர் பாங்கொ க்கில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்டப்பட்டு வந்த 30 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதிலிருந்து இதுவரை ஏழு பேர் உயிரோடு மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கம் ரிக்டர்அலகி ல் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.
இதன் தாக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மக்கள் நில அதிர்வை உணர்ந்திருக்கிறார்கள்.
தாய்லாந்தில் கட்டங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்திருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை கடுமையாக இருக்கும் என்றும் அஞ்சப்படுவதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து முழுவதும் விமான சேவை முற்றிலம் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூடியிருக்கிறது.
மியான்மரில் முற்றிலும் இணையதள சேவை முடங்கியிருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்குத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டடங்களிலிருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டனர். பாங்கொ க்கில் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் விடியோக்களில், வானுயர்ந்த கட்டடங்கள் அசைவதையும், மக்கள் பாதுகாப்புக்காக ஓடுவதையும், கட்டடங்கள் இடிந்துவிழுந்திருப்பதையும் பார்க்கும்போது பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டடங்களுக்குள் இருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தபோது அலறியடித்துக் கொண்டே திறந்தவெளிப்பகுதிகளுக்கு ஓடியுள்ளனர்
தாய்லாந்தில் .மிகப்பெரிய கட்டடங்கள் இருந்த இடங்கள் ஒரு சில நொடிகளில் கட்டடக் குவியல்களாக மாறியிருக்கிறது. வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை ஒலி ஒலித்ததால், மக்கள் வெளியேறியதால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 7.7 என்ற அளவிலும், இரண்டாவது 6.4 என்ற அளவிலும் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவின் வட மாநிலங்களிலும், பங்களாதேஷ் , சீனா வரை பரவியிருந்தது.
மியான்மரில் பூமியதிர்வு ரிக்டரில் 7.7 ஆகப் பதிவாகியிருக்கிறது.
அந்நாட்டில் நேற்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரவியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சகாய்ங்க் பகுதியில் இருந்த பழமையான ஆற்றுப் பாலம் சேதமடைந்திருக்கும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் கட்டடங்களுக்குள் இருந்து அச்சத்துடன் வெளியேறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வானுயர்ந்த கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகும் விடியோவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், நிலநடுக்கத்தின்போது குலுங்கி வெளியே கொட்டும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் வரை உணரப்பட்டிருந்தது
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு தாய்லாந்து வரை பரவியிருந்தது. தலைநகர் பாங்கொ க்கின் மெட்ரோ, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவிலும் உணரப்பட்டுள்ளது. யுன்னான் மாகாணத்தில் நில அதிர்வு பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



![]()