இலங்கை

வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

74 ரூபா முதல் 160 ரூபாவிக்கும் இடைப்பட்ட தொகையை தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளாட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகையான 74 ரூபாய், மன்னார் உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தொகை லஹுகல உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தொகை 160 ரூபாய் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *