உலகம்

சூடானில் பள்ளிவாசல் மீது தாக்குதல்! 5 பேர் உயிரிழப்பு

சூடானில் பள்ளிவாசல் ஒன்றின் மீது, துணை இராணுவப்படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானின் தலைநகரான கார்டூமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை இராணுவப்படையினர் இத் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடானில் கடந்த 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயற்பட்ட வருகின்றார்.

இதனிடையே துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி முதல் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *