அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட தடை!

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ-ஜியோ), பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனு கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, அரசு ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, போராட்டம், மறியல் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
![]()