தையிட்டி ஆர்ப்பாட்டதில் கைவிலங்குடன் வந்து மிரட்டிய பொலிஸார்!

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்திற்குள் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட மேலுமொரு புதிய கட்டடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்ட நிலையில் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து திஸ்ஸ விகாரைக்கு அருகில் நேற்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட இடத்திலும், அண்டிய பகுதிகளிகளிலும் பெருமளவு பொலிஸாரும், புலனாய்வாளர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. இந் நிலையில் பலாலிப் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் நீண்டநேரமாகக் கைவிலங்குடன் அங்கு நின்றிருந்தார்.
இதன்போது, கைவிலங்கைக் காட்டிப் போராட்டக்காரர்களை அச்சுறுத்தாதே! உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி இதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடும் எதிர்ப்பைப் தெரிவித்தனர்.
![]()