இலங்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு – சட்டமா அதிபருக்கு அனுப்ப தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.

பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு விசேட குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *