சஜித்துக்கு ரணில் காலக்கெடு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தங்களுடன் இணைந்து போட்டியிடப் போகின்றீர்களா? இல்லையா? என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களிடையே நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான சஜித் பிரேமதாச தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தங்களுடன் இணைந்து போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கும், இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாநகர சபை மற்றும் ஏனைய முக்கியமான இடங்களில் இரண்டு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக இருந்தால் அது தொடர்பில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய முன்னர் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தி தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் எழுத்து மூலமாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()