உலகம்

2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி -186 பேர் மாயம்!

ஏமன் நாட்டில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 186 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போதுஇருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தில் காணாமல் போனவர்களில் , 181 புலம்பெயர்ந்தோர் எனவும் 5 பேர் பணியாளர்கள் எனவும் ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *