உலகம்

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உளவுத் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தி மினியன்ஸ்”(the Minions) என்று பெயரிடப்பட்ட இந்த குழு, “டெஸ்பிகபிள் மீ”(Despicable Me) கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல செயல்பட்டு, அதிநவீன உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்! | 3 Convicted Spying For Russia From Uk Guesthouse

கத்ரின் இவனோவா (Katrin Ivanova, 33 வயது): வடக்கு லண்டனின் ஹாரோவில் வசிக்கும் ஆய்வக உதவியாளர்வன்யா

திஹோமிர் இவான்சேவ் (Tihomir Ivanchev 39 வயது): வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் வசிக்கும் பெயிண்டர் மற்றும் டெக்கரேட்டர் கிரேட் யார்மவுத் கடற்கரை நகரத்தில் உள்ள 33 அறை விருந்தினர் இல்லத்தை மையமாக வைத்து இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவனோவா மற்றும் கபெரோவா ஆகியோர் பைசர் ஜம்பாசோவ் (Bizer Dzhambazov,, 43 வயது) என்ற மருத்துவ கூரியருடன்(medical courier) காதல் உறவில் இருந்துள்ளனர். ஜம்பாசோவ் இந்த உளவு வளையத்தின் கள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளார்.

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்! | 3 Convicted Spying For Russia From Uk Guesthouse

இந்த நடவடிக்கையின் மூளையாக ஓர்லின் ரூசெவ் (Orlin Roussev, 46 வயது) செயல்பட்டுள்ளார். அவர் முன்னாள் நகர தொழில்முறை நிபுணர் ஆவார்.

மாஸ்கோவில் இவர்களது தொடர்பு ஜான் மார்சலெக் (Jan Marsalek,, 44 வயது) என்பவர் ஆவார். இவர் வயர்கார்ட் என்ற முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி ஆவார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பல்கேரிய நாட்டவர்கள்.அவர்கள் அனைவரும் நீண்ட காலமாக பிரிட்டனில் வசித்து ஐரோப்பிய யூனியன் குடியுரிமை பெற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *