வடக்கில் காணி விடுவிப்பில் இன, மதவாதத்துக்கு இடமில்லை

வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் நிர்மாணங்களின் போது அந்த பிரதேச மக்களின் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் கொண்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நடத்தப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறும் பாதுகாப்பு திட்டங்கள் வீழ்ச்சியடையும் வகையிலும் அந்த மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அது படிப்படியாக நடக்கும். அதேபோன்று ஏதெனும் காணியை விடுவிப்பதிலோ, அந்த இடத்தில் ஏதேனும் நிர்மாணத்தை செய்வதன் ஊடாகவோ ஏதேனும் முறையில் இனவாதம் அல்லது மதவாத மோதல்கள் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது.
நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையுள்ளது. ஐக்கியம், ஒருமைப்பாட்டு இருப்பை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன்படியே இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டளவில் அந்த பிரதேசங்களுக்காக நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எங்கேயும் இனவாதம், மதவாதம் தலைதூக்க இடமளிக்க மட்டோம். இதனாலேயே ஒக்டோபரில் விசேட நிகழ்ச்சியை நடத்த எதிர்பார்க்கின்றோம். இதற்கு இடையூறானவற்றை சகல சம்பவங்களுக்கும் அரசாங்கம் பதிலளிக்கும். காணி விடுவிப்பு, நிர்மாணங்களின் போது அந்த பிரதேச மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளோம் என்றார்.
![]()